India Languages, asked by sayyadul5511, 1 year ago

Nattupura kalaigal essay in tamil

Answers

Answered by Shridgl
76

Answer:

Explanation:

ஒரு நாட்டின் கலை மற்றும் கலாச்சாரம் அச்சமூகத்தினைப் பிரதிபலிக்கும் சிறந்த கருவியாகும்.

கலை என்பது பொழுது போக்கிற்காக மட்டுமின்றித் தகவல் ஊடகமாகவும், கலாச்சாரப் பலகனியாகவும் திகழ்கின்றது. கலை என்பது மன உணர்வுகளின் வெளிப்பாடு.குறிப்பாக  நாடகக் கலைகள் நமது மண்ணோடு, நம்மோடு தொடர்புடையவை. நமதுபாரம்பரியத்தையும் அடி ஆழத்து வேர்களையும் பிரதிபலிப்பவை. கலை, சமூக வளர்ச்சிக்கும், மனஎழுச்சிக்கும் சிறந்த கருவி.

நமது முன்னோர்களின் நம்பிக்கைகள், எண்ணங்கள், சிந்தனைகள், பழக்க வழக்கங்கள், ஆகியவற்றை நாட்டுப்புறக் கலைகள் மூலம் அறியமுடிகிறது. இக்கலைகளே சமுதாயத்தின்ஆவணமாகத் திகழ்கின்றன. இக்கிராமியக் கலைகளே, தகவல் பரப்பும் ஊடகமாகவும் பழக்கவழக்கப் பண்பாட்டுப் பெட்டகமாகவும் திகழ்ந்துள்ளன.

இதுபோன்று ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான கலைகள் உள்ளன. இந்தக்கலைகள் வெளியே தெரியாமல் உள்ளன. மேலும் நாடகம், வீதி நாடகம், இசை நாடகம், நாட்டிய நாடகம், பரதநாட்டியம், இசைச் சிற்பம் போன்ற பல கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.

கிராமியக் கலைகள்:-

ஒயிலாட்டம்

கிராமக் கோவில்களில் ஒயிலாட்டம் விழாக்காலங்களில் ஆடப்படுகிறது. இதிகாச புராண வரலாற்றுக் கதைகளே ஒயிலாட்டத்தில் பாடப்படும், கட்டபொம்மன், மதுரைவீரன், வள்ளி திருமணம் கதைகள் இடம் பெறும். ஒயிலாட்டம் ஆடுபவர் வெள்ளை ஆடை அணிந்து இருப்பர். காலில் சலங்கையும் கட்டியிருப்பர். கையில் ஆளுக்கொரு கைக்குட்டையைப் பிடித்து இருப்பர். நுனியில் பிடித்து அதை அழகாக வீசியபடியே பாடி ஆடுவர்.

கரகாட்டம்

மாரியம்மனுக்கு ஆடி மாதத்தில் கரகம் எடுப்பது தமிழ் நாடெங்கும் உள்ள வழக்கமாகும். மலர்களைக் கொண்டு அழகான ஒப்பனை செய்யப்பட்ட குடத்தைத் தலையில் வைத்துக் கொண்டு ஆடும் ஆட்டம் கரக ஆட்டமாகும். இறை வழிபாட்டுடன் தொடர்பு உடையது இந்த கலை பல்வகை வண்ண மலர்களால் போர்த்தப்பட்டு அழகாகச் செய்யப்பட்டிருக்கும். இந்த கரகாட்டத்தில் ஆண்கள், பெண்கள் ஒன்றாக ஆடுவது பல அடுக்குகள் கொண்ட கரகத்தைத் தாங்கி ஆடுவது கரகாட்டத்தின் தனிச்சிறப்பு.

காவடி ஆட்டம்

காவடியாட்டம் சமய உணர்விற்காகவும் பொழுது போக்கிற்காகவும் நிகழ்த்தப்படுகிறது. காவடி, தண்டைக் கொண்டு ஆடுவதால் இவ்வாட்டம் காவடியாட்டம் எனப் பெயர் பெற்றது காவடி எடுத்து முருகக் கடவுளை வழிபடும் நிகழ்ச்சியாகக் காவடி ஆட்டம் நடைபெறுவது தமிழர்கள் மரபாகும். காவடியாட்டம் இறைத் தொடர்புடையது ஆதலால் பல கடுமையான நோன்புகளை மேற்கொண்டு காவடி எடுப்பர். கலைத்திறனும் ஆடல் நுட்பமும் இதில் மிகுதியாக இருக்கும்.

கும்மியாட்டம்  

தமிழகமெங்கும் நிகழும் ஆட்டங்களில் கும்மியாட்டம் முக்கிய இடம் வகித்து வருகின்றது. கும்மிக்கென்று தனிமெட்டு உண்டு. ஒருவர் முதலில் பாட, அதனைத் தொடர்ந்து பெண்கள் குழுவாகச் சேர்ந்து பாடுவர்.

வில்லுப்பாட்டு

தமிழகத்தில் உள்ள நாட்டுப்புறக் கலைகளில் மிகச் சிறந்தது வில்லுப்பாட்டு. வில்லுப்பாட்டு பிறப்பிடம் குமரி மாவட்டம் வில்லுப்பாட்டில் குறைந்தது ஐந்து பேர் இருப்பர். வில்லுப்பாட்டில் கதைப் பாடல்களைப் பாடிக்காட்டுவார்கள். தலைவர் இருவர் கதையைப் பாட்டாகக் கூறிச்செல்லும்போது விளக்க வேண்டிய இடத்தில் விளக்கி, உரை நடையாக கூறுவர். தெய்வங்களின் வரலாறு. தெய்வ நிலை பெற்ற வீரர்களின் வரலாறு. அரசர்களின் வரலாறு இவற்றை மக்களுக்கு எடுத்துக் கூறவே வில்லுப்பாட்டு பயன்பட்டது. விழாக்களில் பாடப்பட வில்லுப்பாட்டு, இன்று இலக்கியம், அரசியலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அரசியல் சமுதாயத் தலைவர்களின் வரலாறுகள் வில்லுப்பாட்டில் இடம் பெறுகின்றன. காந்தி மகான் கதையை மறைந்த கலைவாணர்பாமர மக்களிடையே பரப்பினார். ஈழத்தில் சின்னமணி வில்லுப்பாட்டால் பிரபலமான ஒரு கலைஞர்.

தெருக்கூத்து

பிறநாட்டுப்புறக் கலைகளைப் போன்றே இதுவும் தெய்வ வழிப்பாட்டோடு தொடர்பு உடையது. திரௌபதி விழாக்களில், மாரியம்மன் விழாக்களில், சிவன், திருமால், கணேசன், ஆகியோருக்கு எடுக்கப்படும் விழாக்களில் தெரு கூத்தானது நிகழ்த்தப்பட்டு வருகிறது.

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நாற்பது கூத்து குழுக்கள் உள்ளன. தெரு கூத்து பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாறுபட்டு நிகழ்த்தப்படுகிறது. தெருக்கூத்தில் வரும் கதாபாத்திரங்களின் பண்புகளை வண்ணங்களும் ஒப்பனையும் வெளிப்படுத்தும், துரியோதனனுக்கு சிவப்பும், துச்சாதனுக்கு மஞ்சள், பீமனுக்கு மேகவண்ணமும், கிருஷ்ணனுக்கு பச்சையும், திரௌபதிக்கு இளஞ்சிவப்பும், அர்ச்சுனனுக்கு நீலமும் தீட்டுவர்.தெருக்கூத்தில் முதன் முதலாக அரங்கினுள் நுழையும் பாத்திரம் கட்டியக்காரன் ஆவான். அவன் கூத்தின் நடுநாயகமான பாத்திரமாகி, அரசனைப் புகழ்பவனாகவும், தூதுவனாகவும், வேலைக்காரனகவும், கோமாளியாகவும், பொது மக்களுள் ஒருவனாகவும், மாறிமாறிப் பாடுவான். கூத்தைத் துவக்கி, காட்சிகளை விளக்கி கதைகளைத் தெரியப்படுத்தி அறிவுரைகளை தூவி, காலநேரச் சூழல்களை முறைப்படுத்தி வாழ்த்துக் கூறுவதுடன் கூத்தை முடிக்கும் பலவேலைகளையும் செய்கின்றவனாக கட்டியக்காரன் தெருக்கூத்தில் இடம் பெறுகிறான். கூத்தின் இறுதிக்கட்டம் பொது வசனம், முடிவுப்பாட்டு, மங்களம் பாடுவதோடு முடியும். தெரு கூத்தானது இவ்வாறு அனைத்து நாட்டுப்புற கலைகளுக்குச் சிறப்பு செய்வதனை காணலாம்.

Answered by zumba12
1

ஒரு நாட்டின் கலை மற்றும் கலாச்சாரம் அதன் கலாச்சாரத்தை பிரதிபலிக்க சிறந்த கருவியாகும்.

  • கலை என்பது பொழுதுபோக்கிற்காக மட்டுமல்ல, தகவல் ஊடகமாகவும் கலாச்சாரத்திற்கான தளமாகவும் இருக்கிறது.
  • கலை என்பது உணர்ச்சிகளின் வெளிப்பாடாகும், குறிப்பாக நம் நிலம் மற்றும் நம்மைப் பற்றிய நாடகக் கலைகள்.
  • அவை நமது பாரம்பரியத்தையும் ஆழமான வேர்களையும் பிரதிபலிக்கின்றன. சமூக வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும் கலை ஒரு சிறந்த கருவியாகும்.

நம் முன்னோர்களின் நம்பிக்கைகள், எண்ணங்கள், எண்ணங்கள், பழக்கவழக்கங்களை நாட்டுப்புறக் கலைகள் மூலம் அறியலாம்.

  • இந்த கலைகள் சமூகத்தின் ஆவணம். இந்த கலாச்சார கலைகள் தகவல் பரப்பும் ஊடகமாகவும், பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சாரத்தின் களஞ்சியமாகவும் உள்ளன.
  • இப்படி ஒவ்வொரு பிராந்தியத்திலும் பல்வேறு வகையான கலைகள் உள்ளன.
  • இந்தக் கலைகள் வெளியில் தெரியவில்லை. மேலும், நாடகம், தெரு நாடகம், இசை நாடகம், நாட்டிய நாடகம், பரதநாட்டியம், இசைச் சிற்பம் போன்ற பல கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

கிராமிய கலைகள்:-

ஒலி

  • கிராமக் கோயில்களில் திருவிழாக் காலங்களில் யோலாட்டம் நடத்தப்படுகிறது.
  • இதிகாச புராண வரலாற்றுக் கதைகள் ஒயிலாட்டத்தில் பாடப்படும், கட்டபொம்மன், மதுரைவீரன், வள்ளி திருமணக் கதைகள் நடைபெறும்.
  • வெண்ணிற ஆடை அணிந்து நடனமாடுபவர் வெள்ளை ஆடை அணிவார். மேலும் கால்களில் கொலுசுகளையும் கட்டினர்.
  • கைக்குட்டையை கையில் பிடித்திருக்கிறார். அதை நுனியில் பிடித்து லாவகமாக எறிந்து பாடி ஆடுகிறார்கள்.

#SPJ3

Similar questions