nee sendru vantha sutrula kurithu un nanbanuku kaditham ezuthu
Answers
Answer:
கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
நண்பனுக்கு நீ சென்ற சுற்றுலா குறித்து கடிதம்
நீங்கள் சென்ற இடம் பற்றி நண்பனுக்கு கடிதம்
ல.முத்துசாமி
வேலூர்
06 .06 .2011
அன்புள்ள ராஜா,
நலம் நலமறிய ஆவல். முத்துசாமி
எழுதுவது. நான் சென்ற வாரம் என் குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாட கன்னியாகுமரி
சென்றேன். நான் சென்ற ஊர்களுள் இதுவே என்னை மிகவும் கவர்ந்தது.இந்திய பெருங்கடல், வங்காள
விரிகுடா, அரபிக் கடல் ஆகிய மூன்று கடல்களும் சங்கமிக்கும் இடம். இந்தியாவின் தெற்கு
பகுதியான இவ்விடத்தில் சூரியன் உதயம் ஆகும் போது இரு கண்களுக்கும் விருந்து போல்
இருக்கும். கடற்கரை எல்லாம் அவ்வளவு அழகு. அங்குள்ள திருவள்ளுவர் சிலை மிகவும்
தத்ரூபமாக செதுக்கி உள்ளதன் மூலம் தமிழனின் திறமை புலனாகிறது. விவேகானந்தர் நினைவு
மண்டபம், காந்தி மண்டபம் போன்றவையும் என்னை கவர்ந்தன. நான் மிகவும் மன திருப்தியுடன் ஊர்
திரும்பினேன். நீயும் ஒரு முறை அங்கு சென்று வா. ஒரு நாள் வீட்டுற்கு அவசியம் வர வேண்டும்.
இப்படிக்கு உன் பதில் கடிதத்தை ஆவலுடன் எதிர் பார்த்து
கொண்டிருக்கும் ஆருயிர் நண்பன்
ல.முத்துசாமி