தன் சுத்தம் என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக
no spam if you don't know means leave it
Answers
Step-by-step explanation:
மாணவர்களே சுத்தம், சுகாதாரம் என்று சொல்லுகிறார்கள். மாணவர்களே நீங்கள் எப்போதும் மன அளவிலும், உடல் அளவிலும் சுத்தமாக இருந்தால், உங்களை பற்றி நல்எண்ணம் மற்றவர்களிடம் எளிதாக கிடைத்துவிடும். இதற்கு உங்கள் பெற்றோர் தொடர்ந்து பயிற்சி அளிக்கவேண்டும். நீங்கள் பள்ளி, கல்லூரிக்கு செல்லும்போது குளித்து உடலை சுத்த செய்தும், சுத்தமான சீருடை அணிவித்தும், நகத்தையும், தலை முடியையும் சீராக கத்தரித்து அழகுபடுத்தி சென்றால் உங்களை பார்த்தாலே தனிமரியாதை ஏற்படுத்தும்.
அந்த வகையில், தங்களையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்வதற்கும் நீங்கள் மாறவேண்டும். தன் சுத்தமும், சமூக தூய்மையும் பேணப்படும் போது தான் சுகாதாரமான, பாதுகாப்பான வாழ்க்கை மக்களுக்கு கிடைக்கும். ஆனால் அதை ஒவ்வொருவரும் தன்னில் இருந்து தொடங்க வேண்டும்.
மேலும் மாணவர்கள் முதலில் உங்கள் வீட்டை சுத்தமாக வைத்து இருக்கவேண்டும். அதன்பின் உங்கள் நண்பர்கள் எல்லோரும் குழு ஒன்று ஆரம்பித்து உங்கள் தெருவை சுத்தமாக வைத்திருந்து பசுமையாக்க முயற்சிக்க வேண்டும். அதாவது கழிவுநீரை அகற்றுதல், சாலையோரம் மரங்கள் வளர்த்தல் போன்றவை செய்ய வேண்டும். இதற்கு நீங்கள் குறைந்தது தினமும் 1 மணி நேரம் செலவு செய்தால் போதும். நீங்கள் இப்படி செய்து வந்தால் உங்களை ஊரில் உள்ளவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் அனைவரும் பாராட்டுவார்கள்.
அதேபோல் தங்களது பள்ளியின் சுற்றுப்புறத்தையும், தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இதற்கான வழிகாட்டுதல்களை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும். மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து குழு அமைத்து பல்வேறு தளங்களிலும் தூய்மை பணியை நேரடியாக மேற்கொள்ள வேண்டும்.
இப்படி செய்தால் பொதுமக்கள் மத்தியில் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பெரிதும் உதவும், சுகாதாரத்தை பேணுவதற்கு பெரிதும் துணை நிற்கும் வகையில் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதை தடுக்கவும், தனிநபர் இல்ல கழிப்பிடங்கள் உருவாகவும், அதற்கு அரசு செய்யும் மானிய உதவிகள் குறித்தும் மாணவர்கள் பொதுமக்களிடம் விளக்க வேண்டும். ஒவ்வொரு நிலையில் படிப்படியாக மாற்றம் என்பது தானாக நிகழும் என்று இருந்துவிடக்கூடாது. அந்த மாற்றத்தை மிக விரைவாக அனைத்து தரப்பினர் மத்தியில் ஏற்படுத்த மாணவர்களால் தான் முடியும்.
அதுபோன்ற சுகாதாரத்திற்கு அடிப்படையான தேவைகளை அதிகாரிகள் ஆய்வுசெய்து அரசுக்கு உடனுக்குடன் பரிந்துரை செய்ய வேண்டும். சுகாதாரம் என்பது ஒருசிலர் மட்டும் செய்வதன் மூலம் மாற்றம் ஏற்படக்கூடிய ஒன்று அல்ல. ஓட்டுமொத்தமாக ஒவ்வொருவரும் சுகாதாரத்தை பேண ஆர்வம் காட்டுவதோடு, தங்களின் பங்களிப்பையும் செலுத்த வேண்டும். அப்போது தான் நகரங்கள் சுகாதாரம் உள்ளதாக திகழும். மக்கள், மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் கொண்டவர்களாக இருக்க முடியும்.
சுகாதார நடவடிக்கைகள் மூலம் உடல் ஆரோக்கியம் மேம்படுத்தும்போது மனிதர்களின் வாழ்நாள் அதிகரிக்கும். மனிதனின் ஆயுளை நீட்டிக்க பல்வேறு ஆய்வுகள் நடந்து வந்தாலும், தன் சுத்தம் பேணி, சுற்றுப்புற சுகாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் அதை சாதிக்க முடியும். அதற்கான திட்ட வரைவுகளை அந்த பகுதியில் உள்ள தன்மைகளின் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும். அதை செயல்படுத்தவும் முனைப்பு காட்ட வேண்டும். எனவே தூய்மை பணியை தன்னில் இருந்து தொடங்கி சமூக அளவில் விரிவுபடுத்த வேண்டும். அந்த நிலையை எய்திவிட்டால் நகரம் மட்டுமின்றி அதில் வாழும் மக்களும் பெருமைக்கு உரியவர்களாக கருதப்படுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
மாணவர்களே தூய்மையில் இவ்வளவு மகிமை இருக்கிறது தெரிகிறதா. இதற்காகத்தான் தூய்மை பணியில் முக்கிய பிரமுகர் அக்கறை மேற்கொள்கிறார்கள். இதை மாணவர்களாக நீங்கள் மனது வைத்ததால் கண்டிப்பாக நடக்கும் என்று நம்புகிறோம்.
மேலும் ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
குடைமிளகாய் புதினா புலாவ்
குடைமிளகாய் புதினா புலாவ்
காய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...
காய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...
விரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி? தாமதப்படுத்துவது எப்படி?
விரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி? தாமதப்படுத்துவது எப்படி?
முகத்தில் எண்ணெய் வழியுதா? அப்ப இதை செய்யுங்க
முகத்தில் எண்ணெய் வழியுதா? அப்ப இதை செய்யுங்க
நார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்
நார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்
Answer:
For that English question no 13,14,11
13)b
14)a
11)a