India Languages, asked by momo68, 1 year ago

Noise pollution letter in Tamil

Answers

Answered by aadisharma5
1

Answer:

ஒலி மாசுறுதல் (Noise pollution) என்பது மனிதன் அல்லது விலங்கின் அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளில் தீங்கு விளைவித்து இடையூறு செய்யும் இரைச்சலைக் குறிக்கிறது. வேண்டத்தகாத இந்த இரைச்சல் உலகெங்கிலும் இயந்திரங்கள், போக்குவரத்து வாகனங்களின் இயந்திரங்கள், தொடர் வண்டிகள் போன்ற போக்குவரத்து அமைப்பால் உண்டாகிறது [1][2]. குறிப்பாக தானுந்து, பேருந்து போன்ற மோட்டார் வாகனங்கள்.[1] ஒலி என்று பொருள் படும் ஆங்கில சொல்லான நாய்ஸ் என்ற வார்த்தை லத்தீன் மொழியில் நாசியா என்ற வார்த்தையை மூலமாக கொண்டது ஆகும், அதன் பொருள் கடலில் வாழ்வதால் ஏற்படும் ஏக்க நோய் ஆகும்.

உலகெங்கும் பரவலாக இரைச்சல் சத்தம் போக்குவரத்து வாகனங்களால் ஏற்படுகின்றன, தானுந்து, பேருந்துகளில் இருந்து வரும் சத்தம் மட்டும் அல்லாமல் இதில் விமானங்கள் பறப்பதாலும், ரயில் வண்டிகள் ஓடுவதாலும் விளையும் சத்தம் அடங்கும்.[1][3][4].குறைகள் நிறைந்த நகரத் திட்டங்களாலும் மிகுந்த இரைச்சல் காரணம் ஒலி மாசு ஏற்படுவதுண்டு, ஏன் என்றால் குடியிருப்பு கட்டிடங்கள் தொழில் செய்யும் பட்டறை கட்டிடங்கள் அருகாமையில் இருந்தால், அதனால் குடியிருப்பு பகுதிகளில் சத்தம் மிகுதியால் ஒலி மாசு ஏற்பட வாய்ப்புக்கள் உண்டாகும்.

வாகனங்களின் ஹாரன் ஓசை, அலுவலகங்களில் பயன்படும் கருவிகள், ஆலை இயந்திரங்கள், கட்டிட பணிகள், தரையை சுத்தம செய்யும் இயந்திரங்கள், குரைக்கும் நாய்கள், கருவிகள், மின் விசைகள், ஒளிபரப்பு கருவிகள், விசைகள், ஒலிபெருக்கி, மின்சார விளக்குகள் எழுப்பும் ஒலி, ஆடல் பாடலுக்கான பொழுதுபோக்கு சாதனங்கள், மேலும் சத்தம் போட்டு பேசும் மனிதர்கள், ஆகியவை அனைத்தும் வீட்டின் உள்ளும், வீட்டின் வெளியேயும், இரைச்சல் உண்டாவதற்கான காரணிகளாகும்.

Similar questions