மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்துச் சென்ற தீவு of
Answers
Answer:
மணிபல்லவத் தீவு
Explanation:
மணிமேகலா தெய்வம் மணிமேகலையை மணிபல்லவத்தீவிலே இறக்கிவிட்டு, மணிமேகலையின் இனிய நினைவுகளால் புரண்டு கொண்ட தூங்காது எதை எதையோ கற்பனை செய்து கொண்டிருந்த உதயகுமாரனைச் சந்தித்ததும் அவனுக்கு அறிவுரை கூறியது. நீ வீணான முயற்சிகளில் இறங்கி உன் மனதை வருத்திக் கொள்ளாதே. அவள் புனித்மானவள், தவ வாழ்க்கையை மேற்கொண்டவள் என்பனவற்றை எல்லாம் மறந்து விடாதே." இவ்வாறு உதயகுமாரனுக்கு அறிவுறுத்தி விட்டு மணிமேகலா தெய்வம் நேராக சுதமதி தூங்கிக்கொண்டிருந்த இடம் சென்றது.
சுதமதியிடம் மணிமேகலா தெய்வம் உரைத்தது.
உவவனம் சென்ற மணிமேகலா தெய்வம் சுதமதியை எழுப்பி தன்னை இன்னார் எனக் கூறியது, இந்திரவிழாவை காணவந்த விபரத்தையும் தெரிவித்தது, மணிமேகலையின் துன்பத்தை தாம் அறிந்ததாகவும் கூறியது. மணிமேகலைக்கு புத்த மதத்தில் சேருவதற்கு வாய்ப்பு உள்ளது எனவும், அவளைத்தாமே எடுத்துச்சென்று மணிபல்லவம் என்ற தீவில் கொண்டு வைத்திருப்பதாகவும் அவள் தம்முடைய முற்பிறப்பு பற்றிய உண்மைகளை அறிந்து கொண்டு இன்னும் ஏழு தினங்களுக்குள் இங்கு வந்து சேருவாள் என்றும் உரைத்தது. மணிமேகலை இவ்வாறு வரும் நாளில் அந்த இடத்தில் சில அற்புதங்கள் நிகழும் என்றும், மாதவியிடம் தான் வந்து மணிமேகலையைத் தூக்கிச்சென்ற விபரத்தை கூறுமாறு சொல்லியது.
மாதவிக்குத் தன்னை தெரியும் என்றும் , மணிமேகலையை பெயர் சூட்டக் கோவலனும் மாதவியும் ஆலோசித்துக் கொண்டிருக்கும் போது, தமது குல தெய்வத்தின் பெயரை இடவேண்டும் என்று கோவலன் மாதவிக்கு கூறியதை நினைவு படுத்தி தம் பெயரைச் சூட்டியதும்.அந்தத் தெய்வம் அப்போது தெரியபடுத்தியது. குழந்தைக்கு 'மணிமேகலை" என்று பெயர் சூட்டிய அன்று இரவு , மாதவியின் கனவில் தாம் தோன்றி, காமன் எதுவும் செய்ய முடியாமல் ஏங்கும்படி மாபெரும் தவக்கொடியாம் பெண்ணணங்கைப் பெற்றாள் மாதவி என்று கூறி வாழ்த்தியதை அவளுக்கு கூறி நினைவு படுத்த வேண்டும் என்றும் அந்த தெய்வம் கேட்டுக் கொண்டது.. இவ்வாறு எல்லாம் கூறிவிட்டு மணிமேகலா தெய்வம் அவ்விடத்தை விட்டு அகன்று விட்டது. இவையனைத்தும் சுதமதிக்கு ஒரு கனவு போல் இருந்தது.
மணிமேகலா தெய்வம் கூறிய வண்ணம் அவள் அந்த சக்கரவளக்கோட்டம் வழியே சென்றாள் அந்தப் பெருஞ்சாலையில் சம்பாபதி கோயிலின் கிழக்குப் பக்கமுள்ள தூணில் துவதிகன் என்பவனுடைய வடுவத்தை போன்று அமைக்கப்பட்ட பாவையிருந்தது. அந்தப்பாவை நாவுடைய பாவை என்றும் கூறுவார்கள். இந்தப்பாவை முக்காலத்தைப் பற்றியும் கூற வல்லது. அது சுதமதியிடம் பேச ஆரம்பித்தது. 'இரவிவர்மன் என்ற வேந்தனின் மகளே என்றும் துச்சன் என்ற அரசனின் மனைவியே என்றும் அவளை அழைத்தது. இதை உணர்ந்த சுதமதி விழித்தாள் முக்காலத்தையும் தெரிந்த பாவை விளக்கமாகப் பேசியது.
"உனது மூத்தாள் தாரை மது உண்டு மயங்கிய ஒரு யானையால் இறந்தாள்; அதைக் கேட்டப் பொறுக்க முடியாத நீயும் இறந்து போனாய். அந்தத் தாரை தான் மாதவி என்றும் கூறினாள். அப்பொழுது நீ வீரை என்னும் பெயருடன் உலவி வந்தாய், பின்னர் கௌசிகன் என்னும் அந்தணன் மகளாக வந்து பிறந்தாய். உன் இப்போதுள்ள பெயர் சுதமதியாகும். உனக்கு இலக்குமி என்ற பெயரில் ஒரு தங்கை இருந்தாள். அந்த இலக்குமி தான் இப்போது மாதவியின் மகளாக - மணிமேகலையாக வந்து பிறந்து இருக்கிறாள். இந்த மணிமேகலையும் தன்னுடைய பழம்பிறவியை உணர்ந்து தெளிந்தவளாய் இன்னும் ஏழு நாட்களில் இங்கு வந்து சேருவாள். நீ எதற்கும் அச்சம் அடைய வேண்டியது இல்லை என்று கூறியது.
பொழுது எப்போது புலரும் என்று எதிர்பார்த்து காத்திருந்த சுதமதி, நன்றாக விடிந்ததும் விரைந்து சென்று முந்தைய இரவு நடந்த அனைத்தையும் சொன்னாள். சுதமதி சொல்லிய அனைத்தையும் கேட்ட மாதவி பெரிதும் வேதனைப்பட்டாள். மகளின் பிரிவால் பெரிதும் வாடினாள். அவளுக்கு வந்த துயரத்தை எண்ணி வருந்தினாள்.