parasyangalude swadheenam
Answers
Answer:
தெருநாய் தொல்லையைக் கட்டுப்படுத்த, புதுச்சேரியில் வீட்டு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தும் பணியை புதுச்சேரி நகராட்சி தொடங்கியுள்ளது.
நாட்டிலேயே முதல்முறையாக இந்த நடைமுறையை புதுச்சேரி நகராட்சி அமல்படுத்தியுள்ளது.
சமுதாயத்தில் புதிய பிரச்னையாக தெருநாய் தொல்லை உருவெடுத்து வருகிறது. தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்தாலும் அவற்றின் பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது.
புதுச்சேரி போன்ற சுற்றுலா நகரங்களில் தெருநாய் தொல்லையால் சுற்றுலாப் பயணிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். எனவே, புதுச்சேரி நகராட்சியில் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த புதிய அணுகுமுறையாக, வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தும் பணியையும் நகராட்சி அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
2014-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மாநிலம் முழுவதும் 32,000 தெரு நாய்கள் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. செல்லப் பிராணியாக மாநிலம் முழுவதும் 2,500 நாய்கள் வளர்க்கப்படுகின்றன. இவ்வாறு வளர்க்கப்படும் நாய்களுக்கு உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டது. அதன்படி, புதுச்சேரி நகராட்சியில் 1000 வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறப்பட்டுள்ளது.
வளர்ப்பு நாய்களுக்கு வயதாகிவிட்டாலோ அல்லது உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டாலோ அவற்றை தெருவில் விட்டு விடுகின்றனர். இதனால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
இதைத் தடுக்கும் வகையில் வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தி, அதன் முழு விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்து கண்காணிக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம், வளர்ப்பு நாய்கள் தெருவில் சுற்றிக் கொண்டிருந்தால், அதை மைக்ரோசிப் உதவியுடன் கண்டறிந்து உரிமையாளரிடம் வழங்க முடியும். அதன்படி, புதுச்சேரி நகராட்சி அலுவலகத்தில் வளர்ப்பு நாய்களுக்கு கழுத்துப் பகுதியில் மைக்ரோ சிப் பொருத்தும் பணி 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. இதற்கு கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் இந்தப் பணி நடைபெறும்.
இதுகுறித்து கால்நடை மருத்துவர் குமரன் கூறியதாவது:
சிறிய மைக்ரோ சிப் நாயின் கழுத்துப் பகுதியில் ஊசி மூலம் செலுத்திவிட்டால், அது அந்த நாயின் ஆயுள்காலம் முழுவதும் உடலில் ஒட்டியிருக்கும். இதனால், நாய்க்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. மைக்ரோ சிப்பை, ஸ்கேன் செய்தால் நாயின் உரிமையாளர் யார், உரிமம் புதுப்பிக்கப்பட்டுள்ளதா, வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டுள்ளதா என்பன போன்ற விவரங்கள் தெரிந்துவிடும். அதுகுறித்து, நாயின் உரிமையாளருக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
இதுவரை 50 நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது. இது பொலிவுறு நகரத் திட்டத்தின் ஓர் அங்கமாகும் என்றார்