pengal munnetram in tamil
Answers
Answer:
பட்டங்கள் ஆள்வதற்கும், சட்டங்கள் செய்வதற்கும் பெண்களுக்குள் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என பாரதியார், பெரியார், திரு.வி.க. ஆகியோர் போராடினார்கள். தற்போது பெண்கள் கல்வி அறிவு பெற்று ஆட்சித்துறை, தொழில்துறை, அறிவியல் துறை, மருத்துவத்துறை, சட்டத்துறை, காவல்துறை, இலக்கியத்துறை போன்ற துறைகளில் பணியாற்றுவதுடன் வெற்றிநடை போடுவதையும் காண்கிறோம்.
இன்றைய பெண்கள் தொழில்செய்வதில் வல்லவர்களாக திகழ்வதோடு, தொழிற்சாலைகள் தொடங்கி அதில் பலருக்கு வேலை கொடுத்து வேலையில்லா திண்டாட்டத்தை போக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பாங்கினை காணமுடிகிறது. கிராமப்புற மகளிர் கூட சுயஉதவிக்குழு உருவாக்கி அதன் வழியாக சேமித்த தொகையுடன் அரசிடமிருந்து கடன் உதவி பெற்று சிறுசிறு கைத்தொழில்களை செய்து மேன்மையுடன் வாழ்கின்றனர். இன்றைய பெண்கள் வீட்டு பொறுப்போடு கூட வேலை ஒன்றை தேடி அதையும் சிறப்பாக செய்து வருகிறார்கள்.
விளையாட்டு துறையிலும் பெண்கள் சிறந்து விளங்குகிறார்கள். வன்மைத்தன்மையுடைய கராத்தே, ஜிம்னாஸ்டிக் போன்றவைகளில் ஈடுபட்டு நாட்டிற்கும், வீட்டிற்கும் பெருமை சேர்க்குமளவு முன்னேறி வருகிறார்கள். ஆண்களுக்கு இருக்கும் சகலவிதமான திறமைகளும் பெண்களுக்கும் உண்டு என்பதற்கு ஏற்ப காவல்துறையிலும் பலர் உயர்பதவிகளில் இருந்து சிறப்பான சாதனைகளை செய்து பணியாற்றி வருகிறார்கள்.
புதுமைப்பெண்களாக, புரட்சி பெண்களாக, துப்பாக்கி ஏந்தி போரிடும் வீராங்கனைகளாக, அறிவூட்டும் ஆசானாக, ஒப்பற்ற இல்லத்தலைவியாக, விண்வெளி ஆராய்ச்சியாளராக, தகவல் தொடர்பு வல்லுனர்களாக என அனைத்துத்துறைகளிலும் பெண்கள் இன்று சிறந்து விளங்குகிறார்கள்.
இந்த நூற்றாண்டில் கிராம பஞ்சாயத்துக்களில், நகர, மாநகராட்சிகளில் உறுப்பினராகி மக்களுக்கு தொண்டு செய்து வருகிறார்கள். மேலும் அரசியலில் ஈடுபட்டு பல உயர்பதவிகளை பொறுப்பேற்று அரிய சேவை செய்து வருகின்றனர். இன்று அரசியலில் பெண்களின் பங்கு அதிகமாக காணப்படுகிறது.
‘தொட்டிலை ஆட்டும் கை
தொல்லுலகை ஆளுங்கை’
என்பதை உலகுக்கு காட்டும் வழியில் பெண்கள் இன்று செயல்பட்டு வருகிறார்கள். பெண்கள் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என்பதை நன்கறிந்து வளர்ச்சி பணியில் ஈடுபட்டு தாங்களும் வாழ்ந்து பிறரும் வாழ வழி செய்கிறார்கள். முன்னேற்ற பாதையில் முனைந்து சென்று நாடு உயர, மேன்மையுற தங்களை அர்ப்பணிக்கின்றனர்.
‘கட்டமைக்க பட்டவற்றில்
கட்டப்பட்டு இருந்தோம்
வீறு கொண்டு எழுந்தோம்
விண் உயர முயற்சி செய்தோம்
அன்றே முடியவில்லை என்றானாலும்
21-ம் நூற்றாண்டில்
எதையும் சாதிக்க முடியும்
வீரப் பெண்களால்!’
மேலும் ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
குடைமிளகாய் புதினா புலாவ்
காய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...
விரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி? தாமதப்படுத்துவது எப்படி?
முகத்தில் எண்ணெய் வழியுதா? அப்ப இதை செய்யுங்க
நார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்
தனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்
here is your answer mate