India Languages, asked by nandhinisunder03, 2 months ago

வெள்ளப் பேரழிவு குறித்து நாழிதாழ்ச் செய்திகளைத் தொகுக்க please answer in Tamil for 2 or 3 pages​

Answers

Answered by poorna2009
4

Answer:

வெள்ளப் பேரழிவு குறித்து நாழிதாழ்ச் செய்திகளைத் தொகுக்க

Explanation:

வெள்ளம் என்பது நிலத்தை மூழ்கடிக்குமளவுக்குத் தேங்கி நிற்கும் அல்லது பொங்கிப் பாய்ந்தோடும் நீர் ஆகும்.ஆறு அல்லது ஏரி போன்ற நீர்நிலைகளில் உள்ள நீர் மிகையாகும் போது அல்லது கரை உடையும் போது அது தனது வழக்கமான எல்லைகளைத் தாண்டுகிறது. நீரோட்டத்தின் வலிமையானது மிகவும் அதிகரிக்கின்ற போது ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும். அது ஆற்றின் பாதையைத் தாண்டி பெருக்கெடுத்து ஓடி கரையோரம் ஒட்டி அமைந்துள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனகளுக்கு சேதம் உண்டாக்குகிறது.

நீர் நிலைகள் மற்றும் ஆறுகளில் இருந்து மிகவும் தொலைதூரத்தில் சென்று குடியிருப்பதன் மூலம் வெள்ளத்தால் ஏற்படும் சேதங்களை தவிர்த்து விடலாம் என்றாலும் வாழ்க்கைக்குரிய ஆதாரத்தைப் பெறுவதற்கும் பயணம் மற்றும் வர்த்தக வசதிகளின் காரணமாகவும் பன்னெடுங் காலம் தொட்டே மக்கள் நீர்நிலைகளின் அருகிலேயே குடியிருந்து வருகிறார்கள்.

வெள்ளத்தின் முக்கிய வகைகள்

ஆஸ்திரேலியாவின் வடபிரதேசத்தில் உள்ள டார்வின் பகுதியில் பருவ கன மழையால் ஏற்பட்ட கடல்கூம்பு வெள்ளப்பெருக்கு.

ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடாவில் வீசிய வில்மா சூறாவளியின் தாக்கத்தால் ஏற்பட்ட புயல்மழை பொங்கு வெள்ளம், அக்டோபர் 2005.

இடிமழைப் புயலால் ஏற்பட்ட திடீர் வெள்ளம்.

ஆற்று மருங்கின் வெள்ளங்கள்

மெதுவான வகை: தொடர்ச்சியாகப் பெய்யும் மழை அல்லது பனிஉருகுதல் வேகம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக இது உண்டாகும். பருவக் காற்றினால் உண்டாகும் கனமழை, புயல் மற்றும் காற்றழுத்தங்கள் மற்றும் பனிப்படிவுகளை உருகச் செய்யும் வெப்பமழை ஆகியவை இதற்கான காரணங்களில் சில. எதிர்பாராத தடங்கல்களான நிலச்சரிவு, பனிப்பாறைகள் அல்லதுவிரைவு வகை/உடனடி வகை: திடீர்வெள்ளங்கள். இடியுடன் கூடிய பெருமழை அல்லது நீர்த்தேக்கங்களில் கரைகள் உடைவது, நிலச்சரிவு மற்றும் பனியாறு ஆகியவை இதற்கான காரணங்களாகும்.

கழிமுக வெள்ளங்கள்

பொதுவாக புயலால் உண்டாகும் கடல் அலை பொங்குநிலை மற்றும் அழுத்தப் புயல்காற்றால் கழிமுக வெள்ளங்கள் (Estuarine floods) உண்டாகின்றன. அயனப்புயல் அல்லது கூடுதல் அயனப்புயலில் (extratropical cyclone) இருந்து உருவாகும் தீவிரப்புயலும் (storm surge) இந்த அட்டவணையில் அடங்கும்.

கடற்கரையோர வெள்ளங்கள்

கடுமையான கடற்புயல் அல்லது வேறு இயற்கைச் சீற்றங்கள் (உதாரணம்: சுனாமி அல்லது சூறாவளி) காரணமாக இவை உருவாகின்றன. அயனப்புயல் அல்லது அதிவெப்பப் புயலில் இருந்து உருவாகும் தீவிரப்புயலும் இதில் அடங்கும்.

பேரழிவு வெள்ளங்கள்

அணை உடைப்பு போன்ற எதிர்பாராத நிகழ்வுகள் அல்லது வேறு இயற்கைச் சீற்றத்தின் (உதாரணம்: நிலநடுக்கம் மற்றும் எரிமலை சீற்றம்) விளைவாக உண்டாகும் பேரழிவுகள் காரணமாக பேரழிவு வெள்ளங்கள் (Catastrophic floods) ஏற்படுகின்றன.

சேற்று வெள்ளங்கள்

விவசாய நிலத்திலிருந்து வழிந்தோடும் மிகையான நீரால் இத்தகைய சேற்று வெள்ளங்கள் (muddy floods) உருவாகின்றன. விவசாய நிலங்களில் (வடிகால் இல்லாமல்) தேங்கும் மிகையான நீர் மண்ணை அரித்து சேற்று வெள்ளமாக உருவாகிறது. பிறகு நீரோட்டத்தால் வண்டல் படிவுகள் பிரிக்கப்பட்டு அடிமட்டத்திலேயே அடித்துச் செல்லப்படுகின்றன. மக்கள் வசிக்கும் பகுதிகளை அடையும் போதுதான் இந்த சேற்று வெள்ளங்கள் பெரும்பாலும் கண்டுபிடிக்கப்படும். ஆகையினால், சேற்று வெள்ளங்களையும் மொத்த சேற்று குன்றுச்சரிவு படிவுகளின் இடப்பெயர்ச்சியால் நிகழும் சேற்று பாய்ச்சலையும் குழப்பிக் கொள்ளாமல் தவிர்க்க வேண்டும்.

Mark as Brainiest.Naanum Tamil dhaan.Thalapathy fan

Similar questions