India Languages, asked by ramya1006, 8 months ago

நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு

கட்டுரை எழுதுக..
please fast guys​

Answers

Answered by AadilPradhan
46

நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு

இளைஞர்கள் எந்த நாட்டின் அதிசய சக்தி. இளைஞர்கள்தான் மனிதகுலத்தின் சிறந்த நம்பிக்கை. வெற்றி, செழிப்பு, அமைதி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் எதிர்கால இலக்குகள் ஏதேனும் நிறைவேற்றப்பட வேண்டுமானால், அவற்றின் பங்கேற்பு அவசியம். இதேபோல், ஒரு நாடு தேசிய வளர்ச்சியின் இலக்கை அடைய விரும்பினால், அது இளைஞர்களை வளர்ச்சித் திட்டங்களில் ஈடுபடுத்த வேண்டும்.

இளைஞர்கள் தங்கள் சிறந்ததைக் கொடுப்பதன் மூலம் சிறந்த பங்களிப்பை வழங்க முடியும். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வேலையையும் பொறுப்புகளையும் செய்தபின் செய்ய வேண்டும். அர்ப்பணிப்புத் தலைவர்களின் சரியான வழிகாட்டுதலின் கீழ் முழு இளைஞர் சக்தியும் வளங்களும் பயன்படுத்தப்பட்டு உகந்த முறையில் பயன்படுத்தப்பட்டால் அனைத்து சவால்களையும் எளிதில் சமாளிக்க முடியும். இந்தியா அதிசயங்களைச் செய்ய முடியும். இந்தியா நிச்சயமாக அதிசயங்களைச் செய்யும். இந்திய இளைஞர்கள் தங்கள் வார்த்தைகள், செயல்கள் மற்றும் செயல்களால் இந்தியாவை வாய்ப்புகள், வளர்ச்சி மற்றும் செழிப்பு நிலமாக மாற்ற தங்கள் இதயங்களை அமைத்தால்தான் அது நடக்கும்.

ஒரு நாடு சுகாதாரம், நிதி, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை ஆகிய துறைகளில் வெல்லமுடியாத செழிப்பை அடைய வேண்டுமென்றால், அந்த தேசத்தின் இளைஞர்கள் ஒரு தெய்வீக குணம் என்பதால் ஒருமைப்பாட்டின் கொள்கையை பின்பற்ற வேண்டும்; இது ஆற்றல், உற்சாகம், படைப்பாற்றல், அச்சமின்மை, நோக்கத்தன்மை மற்றும் சாதனை ஆகியவற்றை அதிகரிக்கிறது. மிகச்சிறிய விவரங்களில் கூட ஒருமைப்பாட்டைப் பயன்படுத்துவதன் மூலம், அவர்கள் மேலே குறிப்பிட்ட துறைகளில் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும்.

முடிவில், இளைஞர் சக்தியை உகந்ததாகவும், புத்திசாலித்தனமாகவும் தட்டினால், தேசிய வளர்ச்சி என்பது ஒரு சிஞ்ச் மட்டுமே என்று கூறலாம்.

Answered by Anonymous
72

Answer:

முன்னுரை

பொதுவாக ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் வளர்ச்சிக் கூறுகளின் நிலைத்த தன்மைக்கும் உந்து சக்திகளாக பல்வேறு காரணிகள் அறியப்பட்டாலும் அவற்றுள் முதன்மையானது மட்டுமல்ல தவிர்க்க முடியாத சக்தியாகவும் முன்நிற்பது அந்நாட்டின் இளைஞர்களே ஆவர். புதிய சிந்தனைகள், மேம்பட்ட திறன்கள், புதுமைகளை உள்வாங்கும் நிலை, தளராத முயற்சி, வளர்ச்சி நோக்கிய இலக்கு, நவீன உத்திகளைக் கையாளுதல் போன்ற எண்ணற்ற பரிமாணங்கள் இளைஞர்களின் தகுதியையும் தரத்தையும் உயர்த்திப் பிடிப்பதால் அவர்களை விலக்கி வைத்துவிட்டு வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வது இயலாததாகும். எனவேதான் நூறு ஆண்டுகளுக்கு முன்பே இளைஞர்கள் தான் நாட்டின் எதிர்காலம் அவர்களின் கைகளில் தான் நாடு உள்ளது என்று இளைஞர்களின் சக்தியை உலகிற்கு உணர்த்தினார் சுவாமி விவேகானந்தர்.

நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பு

இளைஞர்களின் பங்களிப்பும் மாறுபட்ட அணுகுமுறையும் நாட்டின் வளர்ச்சிப் போக்கினைத் தீர்மானிப்பதற்குப் பேருதவியாக இருந்ததால் இளைஞர்களின் முன்னேற்றத்திற்கேற்ப நாட்டின் வளர்ச்சி விரைவுபடுத்தப்பட்டது. அந்த வகையில் இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் வளர்ச்சித் தூதுவர்களாக கருதப்பட்டனர். எதிர்காலம் மட்டுமன்றி நிகழ்காலத் தேவைகளையும் கருத்தில் கொண்டு வளர்ச்சிச் சமத்துவத்தைப் பரவலாக்குவதற்கான செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் வளர்ச்சிப் பங்காளிகளாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

அறிவு, ஆற்றல், அனுபவம், துணிவு போன்றவற்றின் அடிப்படையில் வளரும் நாடுகளில் மட்டுமல்ல அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும் கூட இளைஞர்களின் செயல்பாடுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுவதால் மாற்றங்களுக்கு வித்திடும் இன்றைய உலகில் இளைஞர்கள் மாற்று சக்திகளாகவும் உருவாகி நிற்கின்றனர்.

உலகில் சில நாடுகள் தான் மக்கள்தொகையில் கணிசமான அளவு இளைஞர்களை வரப்பிரசாதமாகப் பெற்றுள்ளது. அந்த வகையில் இந்தியாவின் மக்கள்தொகையில் ஏறத்தாழ 50 சதவீதத்திற்கும் மேல் 25 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் உள்ளனர். வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் உலக அரங்கில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள இந்தியாவின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் அடித்தளமாக இருப்பது வளர்ச்சி சார்ந்த நிகழ்வுகளில் இளைஞர்கள் ஈடுபடுவதும் அவர்களின் உறுதிமிக்க பங்களிப்பும் தான். இவர்களின் ஈடுஇணையற்ற, நேரடியான மற்றும் மறைமுகமான பங்களிப்பால் நவீன இந்தியா சவால்களையும் சறுக்கல்களையும் எதிர்கொண்டு அதற்கான சரியான தீர்வுகளைக் கண்டறிந்து சமூக, பொருளாதாரத் தளத்தில் வளமான பாதையில் பயணித்து வருகின்றது.

எனவே ஒவ்வொரு நாட்டிலும் அங்கு நிலவும் சூழ்நிலைக்கேற்ப அந்நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பு இன்றியமையாததாக உள்ளது. பன்முகத் திறன் கொண்ட இவர்கள் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர்.

Explanation:

Please mark me as brainlist

Similar questions