India Languages, asked by krsankark, 2 months ago

நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கடிதம். please help me please give correct answer​

Answers

Answered by varun13154
6

Answer:

Home கடிதம்

கடிதம்

நண்பனின் பிறந்த நாள் கடிதம்

By சி.வெற்றிவேல் - 10/08/2018

காதலியே

அன்புள்ள வெற்றி,

நலம்.

நலமும் , வளமும், சுகமும் பெற்று நிறைவாக வாழ என் அன்பு வாழ்த்துகள்.

அன்னியோன்னியமான நட்பை நான் யாரிடமும் எதிர்பார்த்ததில்லை, கேட்டதும் இல்லை.

பெரும்பாலும் எல்லாருமே பிரதி உபகாரம் எதிர்பார்க்கிறார்கள். நான் கொடுத்தால் நீ கொடுக்க வேண்டும்., நான் உனக்காக காத்திருந்து கடுப்பாகிவிட்டேன் உன்னையும் காக்க வைக்கிறேன் பார்., நான் கால் செய்த போது எடுக்காமலா இருக்கிறாய் இரு உன் அழைப்பை நான் எடுக்காமல் இருக்கிறேன்.,

இன்னும் இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்..

உன்னை யோசிக்கிறேன், என்னை வரசொல்லி அழைப்பு விடுத்துவிட்டு, வருகிறேன் கொஞ்சம் வெய்ட் பண்ணு என்று நான் சொன்னதற்காய் இரண்டு மணி நேரம் ஓசூர் பேருந்து நிலையத்தில் காத்திருந்தாயே! ,மகா தாமதமாக நான் வந்த வினாடியில் எல்லாருமே வழக்கமாக கேட்பார்களே ஏன் லேட்டு என்று அப்படி

கேட்காமல் “எப்படி இருக்கிறாய்?” என்றாயே., எப்படி உன்னால் முடிந்தது அப்படி அன்று கேட்க !!

கனவுகளை கண்களில் சுமந்தபடி, கடலலையில் கால்கள் நனைந்தபடி கடற்கரையோரமாய் ஐந்தாறு கிலோமீட்டகள் தனுஷ்கோடி கடற்கரையில் கதைபேசி நடந்தோமே!! கால் வலிக்கும் , நேரமாகிவிடும் , நடக்க வேண்டாம் என்றெல்லாம் நீ சொல்லவே இல்லையே ! அவ்வப்போது யோசிப்பேன் ஏன் நீ ஒரு retro type நண்பனைப்போல் cliche யாக பேசியதே இல்லை என.

நீ ஒரு தனிப்பிறவி் எல்லோருமே தனித்துவமான ஜந்துக்கள் தான் , ஆனால் அவர்களுக்கு அது தெரிவதில்லை இறைவனின் செயல்களில் மறைத்தல் என்பதும் ஒன்று, அதன் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் இது என நினைக்கிறேன், அகந்தை கொண்டவர்களுக்கு உண்மை அறிவு மறைக்கப்படும் என்பது நம் தமிழ் மறைகளின் வாக்கு. அகந்தை எனப்படும் அந்த EGO இருப்பதால் தான் பெரும்பாலான நண்பர்கள் பெரும்பாலும் சண்டை, குழப்பம் , பிரிவு என சிதறுருகிறார்கள். நீயும் கூட என்னை அவ்வப்போது திட்டியிருக்கிறாய், கடிந்திருக்கிறாய் ஆனால் அதில் அகந்தை இருந்ததாய் நான் உணர்ந்ததேயில்லை. அன்பில் அகந்தையை கலக்காமல் நீ பழகும் நட்புக்கு எந்நாளும் நான் கடன்பட்டிருக்கிறேன்.

இன்று காலையில் நான் உனக்கு கால் செய்து “பிறந்தநாள் உனக்கு இன்னைக்கா, நேத்தா” என கேட்கிறேன்.. “இன்னைக்குத்தான்.. தூங்கிட்டு இருக்கேன் அப்புறமா கால் பண்றேன்” என்கிறாய். “சரி” என்று சிரித்துக்கொண்டே கட் செய்கிறேன்…

எத்தனை பேருக்கு வாய்க்கும் இப்படியான நட்பு…

இனிய பிறந்த தின வாழ்த்துகள்

என்றும் அன்புடன்,

கடல்

Similar questions