India Languages, asked by amrishwaranravikumar, 4 months ago

இன்றய சாதனைப் பெண்கள் என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.
pls say the answer who comes first i will give likes and follow you fast............​

Answers

Answered by asmathunkiyasudeen
2

Answer:

இயற்கையின் படைப்பில் சகல உயிரினங்களும் எல்லாமும் வல்ல ஆற்றலும் தனித்தன்மையும் கொண்டு இவ்வுலகில் இயங்கி வருகின்றது. டார்வின் தியரியின் படி இவ்வுகம் குரங்கில் இருந்து பரிணாம வளர்ச்சியடைந்து, ஹோமோ சேப்பியன்ஸில் இருந்து மனிதன் என்ற பரிமாணத்தை அடைந்து இன்று உலகையே கையில் வைத்து விண்ணையும் தனது அறிவெனும் விஞ்ஞான அறிவியல் தொழில்நுட்பத்தின் பிடியில் வைத்து அரசாள எண்ணி நிதம் நிதம் கணம் தோறும் பல்வேறு விதமாக யோசித்துக் கொண்டிருக்கிறான்.

அப்படிப்பட்ட இந்த உலகில் மனிதனைப் படைக்கும் சக்தி சொரூபமாக கண்ணில்பட்ட தெய்வமாகவும் வாழும் கடவுளாகவும் நம் முன்னர் பெண்கள் இருக்கின்றார்கள். ஒரு பிள்ளையைப் பெற்று வளர்த்தெடுப்பதில் ஒரு பெண்ணுக்கு உள்ள ஆத்மீகத் தொடர்பை நினைத்தால் அவளது உயிரைப் பாலாகக் பச்சிளம் குழந்தைக்குக் கொடுப்பதைப் போன்று அவளது தன்னம்பிக்கை,புன்னகை எல்லாவற்றையும் பிள்ளைக்கும், கணவருக்கும், சகோதரன், சகோதரனுக்குக் கொடுத்துவிட்டு, மனதுக்குள் எதையும் அனுசரித்துக் கொண்டு போவதைப்போன்று நிதானமாக இவ்வுலகில் தன் சோகத்தை முந்தனையில் முடிச்சிட்டுவைத்திக்கொண்டு வாழ்வில் தன்னையும், தன் குடும்பத்தினரையும் தன்னைச் சேர்ந்தோரையும் முன்னேற்ற அநுதினமும் இயந்திரமாக உழைத்து உயர்ந்தோங்கிவருகிறார்கள். உலகிற்கு முன்மாதிரியாகவும் திகழ்கிறார்கள் !

அவர்களின் வாழ்க்கைப் படிநிலைகளை நாம் தெரிந்துகொண்டாலே அது மனதில் உற்சாக டானிக்காக இனிக்கின்ற ரகமாகும்.

பழங்காலத்தில், பெண்களை வீட்டுப்படி தாண்டவிடாத இந்தச் சமூகம் இன்று விண்ணில் வெற்றிக் கொடிநட்டு, ஆண்களைவிட அதிக நாட்கள் விண்ணில் தங்கிக்காட்டுகிற அளவுக்கு மனோதைரியத்தையும், விடாமுயற்சியையும், நினைத்ததைச் சாதிக்கின்ற வல்லமையும் , உடல்வலிமையும் வாய்த்திருக்கிறது என்பதை நினைத்தால் மனதில் பெருமை பொங்குகிறது.

நாட்டில் முதல் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டி, இரக்கத்தில் வடிவம் கருணையின் தாய் அன்னை தெரசா போன்றவர்களின் உழைப்பையும் அவர்கள் தங்கள் தன்முனைப்புடன் இந்த உலகில் பெண்மையை உயர்த்திப் பிடித்த காலத்தையும் இப்போதுள்ள காலத்தையும் நம்மால் ஒப்பு நோக்க முடியாவிட்டாலும், பாரதியாரின் மனைவி செல்லம்மா எப்படி ஒரு மகா கவிக்கு தனிப்பெருந்துணையாய் இருந்தாரோ அதேபோல் இவ்வுலகிற்கு ஓவ்வொரு பெண்களும் ஆணின் வளர்ச்சிக்கு அவனது வெற்றிக்கும் உறுதுணையாக இருக்கிறார்கள்.

சிங்கப் பெண்கள் அவர்கள் பிரசவ வலியையைத் தாங்குகின்ற அவர்களின் சுகமான இன்னல் தருணத்தை நாம் மனதால் உணர்கின்றபோதுதான் அதன் பெருமையை கர்வத்துடன் புரிந்துகொள்ள முடியும்!

அது மானிட உலகிற்கு இயற்கையும் இறைவனும் ஒருசேர ஒருமித்த குரலுடன் பெண்ணிற்கு அளித்த பெரும்பேறுகாலம் அது.

Similar questions