India Languages, asked by sanjulakshy2020, 6 months ago

நீ விரும்பும் நூல்- திருக்குறள் 'என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

plzz say more answers ​

Answers

Answered by kikibuji
105

நான் விரும்பும் நூல் - திருக்குறள்

குறிப்புச் சட்டகம்:

  • முன்னுரை
  • ஆசிரியர் குறிப்பு
  • நூல் அமைப்பு
  • உலகப் பொதுமறை
  • நூலின் சிறப்பு
  • எனக்குப் பிடிக்கக் காரணம்
  • முடிவுரை

முன்னுரை:

நம் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துக் கருத்துகளும் உள்ளடக்கி, நம் வாழ்க்கை சிறக்க வித்திட்ட , பொய்யில் புலவராம் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் , நான் விரும்பும் நூலாகும்.

ஆசிரியர் குறிப்பு:

திருக்குறள் என்னும் அரிய நூலை நம்பாற் சேற்றவர் திருவள்ளுவர் ஆவார். இவரது உண்மையான பெயர் அறியப்படவில்லை. வள்ளுவர், முதற்பாவலர், தெய்வப்புலவர், மாதானுபங்கி, நாயனார், நான்முகனார் , பொய்யில்புலவர், பொய்யாமொழிப் புலவர், தேவர், பெருநாவலர் என்ற பல பெயர்களால் சிறப்பிக்கப்படுகிறார்.

நூல் அமைப்பு:

திருக்குறள் இரண்டு அடிகளைக் கொண்டுள்ளது. முதல் அடியில் நான்கு வார்த்தைகளும், இரண்டாம் அடியில் மூன்று வார்த்தைகளுமாக, மொற்றம் ஏழு வார்த்தைகளைக் கொண்டது. இது முப்பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவை அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப் பால் ஆகும். திருக்குறள் 133 அதிகாரங்களையும், 1330 குறட்பாக்களையும் கொண்டுள்ளது.

உலகப் பொதுமறை:

உலகப்பொதுமறை , தெய்வ நூல், முப்பால் , உத்தரவேதம், முதற்காப்பியம் என்றெல்லாம் போற்றப்படுவது திருக்குறள் ஆகும். இதன் இரண்டடிகள் உலக உண்மைகள் அனைத்தையும் தன்பால் கொண்டுள்ளன. அரசன் முதல் ஆண்டி வரை பின்பற்றக் கூடிய எளிய நூலாக விளங்குகிறது. இதன் கருத்துகள் அனைத்துச் சமயத்தாருக்கும் பொதுவாக அமைவதால், திருக்குறள், உலகப்பொதுமறையாயிற்று.

நூலின் சிறப்பு:

திருக்குறளைப் போற்றி பாடும் நூல் திருவள்ளுவமாலை ஆகும். திருக்குறளுக்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அதில் பரிமேலழகர் உரையே சிறந்ததாகச் சான்றோர்களால் கருதப்படுகிறது. உலகிற் சிறந்த மக்கள் உலகத்தைச் சிறக்க செய்யும் திருக்குறளை அவர் தம் தாய்மொழிகளில் மொழி பெயர்த்துள்ளனர்.

எனக்குப் பிடிக்கக் காரணம்:

திருக்குறள் தன் இரண்டே வரிகளால் உலக உண்மைகளை அழகாக எடுத்தியம்புகிறது. சான்றாக ஒருவன் குற்றம் செய்தால் அதற்குத் தண்டனை வழங்கும் முறையைக் கூறுகிறது. ஆனால் அத்தண்டனை அவ்வளவு கொடியதாக இருக்க வேண்டாமென்றும் கூறுகிறது. அரசன் யார்; அவன் எப்படி இருக்க வேண்டும்; அவனை மதிக்கும் முறை என்று பல கருத்துகளைத் தன்பாற் கொண்டுள்ளது.

பொருளிலார்க்கு உலகம் இல்லை என்று கூறுகிறார் திருவள்ளுவர். ஆனால் அப்பொருட்செல்வத்தை விடச் சிறந்தது கல்விச் செல்வம் என்றும் தெளிவுறுத்துகிறார் .

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்குமாடல்ல மற்றை யவை

அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு

இதில் கடவுளைப் போற்றும் வள்ளுவர் மற்றொரு குறளில் கடவுளை ஏசிக்கவும் தவறவில்லை.

முடிவுரை:

ஆலும் வேலும் பல்லுக்குறுதி

நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி

இதில் இரண்டு என்பது இரண்டு அடிகளைக் கொண்ட திருக்குறளைக் குறிக்கும். இத்தொடரின் மூலம் திருக்குறளின் பெருமையை நாம் நன்கு அறியலாம்.

Answered by rajasarveshvara
2

நான் விரும்பும் நூல் - திருக்குறள்

குறிப்புச் சட்டகம்:

*முன்னுரை

*ஆசிரியர் குறிப்பு

*நூல் அமைப்பு

*உலகப் பொதுமறை

*நூலின் சிறப்பு

*எனக்குப் பிடிக்கக் காரணம்

*முடிவுரை

Similar questions
Math, 11 months ago