India Languages, asked by sdautoconsulting1982, 7 months ago

puthu kavithaiyen thoitramum valaircheyum 10 mark​

Answers

Answered by SGS126
6

Answer:

புதுக்கவிதையின் தோற்றம்

வால்ட் விட்மனின் “புல்லின் இதழ்கள்” என்ற புதுக்கவிதை மகாகவி சுப்ரமணிய பாரதியை வெகுவாகக் கவர்ந்தது. இந்தக் கவிதையினால் உந்தப் பட்டு தானும் தமிழில் புதுக் கவிதையைப் படைக்க வேண்டும் என பாரதி எண்ணினார். அவருக்கே உரிய பாணியில் பாரதியார் படைத்த கவிதைகளை ‘வசனக் கவிதைகள்’ என்று வகைப் படுத்தி வெளியிட்டார். இந்த வகையில் பாரதி இயற்றிய முதல் புதுக் கவிதைக்கு ‘காட்சிகள்’ என்று அவர் பெயரிட்டார். பாரதி காட்டிய வழியில் ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராசகோபலன், வல்லிக்கண்ணன், புதுமைப்பித்தன் போன்ற கவிஞர்கள் புதுக் கவிதையை வளர்த்தனர்.

தமிழில் புதுக் கவிதையின் வளர்ச்சியை நாம் மூன்று காலங்களாகப் பிரிக்கலாம். அவை மணிக் கொடிக் காலம், எழுத்துக் காலம் மற்றும் வானம்பாடிக் காலம் ஆகியனவாகும். இந்தக் காலகட்டங்களில் வெளிவந்த தமிழ் இதழ்கள் புதுக்கவிதைக்குப் பொலிவூட்டின.

மணிக்கொடிக் காலம்

மணிக் கொடிக் காலத்தில் மணிக்கொடி, சூறாவளி, காலமோகினி, கிராமஊழியன், சிவாஜிமலர், நவசக்தி, ஜெயபாரதி ஆகிய இதழ்கள் புதுக் கவிதையை வெளியிட்டன. இந்தக் காலக் கட்டத்தில் புதுக் கவிதைகள் இயற்றிய முக்கியமான கவிஞர்கள் ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராசகோபாலன், க.நாசுப்பிரமணியன், புதுமைப்பித்தன் போன்றோர்.

எழுத்துக் காலம்

இக்காலகட்டத்தில் புதுக் கவிதையை வெளியிட்ட இதழ்கள் எழுத்து, சரஸ்வதி, இலக்கிய வட்டம், நடை, தாமரை, கசடதபற ஆகியன. இக்காலத்தில் புதுக் கவிதை இயற்றிய கவிஞர்கள் மயன், சிட்டி, வல்லிக்கண்ணன், சிசுசெல்லப்பா, க.நாசுப்பிரமணியன் போன்றோர்.

வானம்பாடிக் காலம்

வானம்பாடி, தீபம், கணையாழி, சதங்கை முதலிய இதழ்கள் வானம்பாடிக் காலத்தில் தோன்றி வளர்ந்தன. இக்காலத்தில் புதுக்கவிதையை வளர்த்த முக்கியமான கவிஞர்கள் புவியரசு, ஞானி, முல்லைஆதவன், அக்கினிபுத்திரன், சிற்பி, கங்கை கொங்காண்டான், தமிழ்நாடன், சக்தி கனல், மு.மேத்தா, தமிழன்பன், ரவீந்திரன் ஆகியோர்.

Explanation:

HOPE IT HELPS UH NANBA!

MARK AS BRAINLIEST!

Similar questions