questions about tamilan idhayam
Answers
தமிழன் இதயம்
நாமக்கல் கவிஞர்
தமிழன் என்றோர் இனமுண்டு,
தனியே அவர்க்கொரு குணமுண்டு
அன்பே அவனுடைய மொழியாகும்
அமிர்தத் திருக்குறள் அடைந்தவனாம்
பொறியின் ஆசையைக் குறைத்திடவே
பொருந்திய நூல்கள் உரைத்திடுவான்
கவிதைச் சுவைகளை வடித்தெடுத்தான்
கம்பன் பாட்டெனப் பெயர்கொடுத்தான
புவியில் இன்பம் பார்த்த வெலாம்
புண்ணிய முறையில் நுகர்ந்திடுவான்
பத்தினி சாபம் பலித்துவிடும்
பாரில் இம்மொழி ஓவித்திடவே
சித்திரச் சிலப்பதி காரமதைக்
சிந்தா மணி. மணி மேகலையும்
பத்துப் பாட்டெலும் சேகரமும்,
நந்தா விளக்கெனத் தமிழ்நாட்டின்
நாகரி கத்தினை மிகக் காட்டும்
தேவா ரம்திரு வாசகமும்
திகழும் சேக்கி மார்புகழும்
ஓவாய் பெருங்கதை ஆழ்வார்கள்
உரைகளும் தமிழன் வாழ்வாகும்
தாயும் ஆனவர் சொன்னவெலாம்
தமிழன் ஞானம் இன்னதெனும்
பாயும் துறவுகொள் பட்டினத்தார்
பாடலும் தமிழன் பாடவௌலாம்?
நேரெதும் நிலை பாக்கமுடன்
நிமிர்ந்திட அச்சம் போக்கிவிடும்