rDNA தொழில்நுட்ப வருகைக்கு முன்
இன்சுலின் எவ்வாறு பெறப்பட்டது? எத்தகைய
பிரச்சனைகள் எதிர்கொள்ளப்பட்டன?
Answers
Answered by
0
இன்சுலின்
- இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவினை கட்டுப்படுத்த இன்சுலின் பயன்படுகிறது.
- இன்சுலின் நம் உடலில் கணையத்தில் உள்ள லாங்கர்ஹான் திட்டுகளில் உள்ள β செல்களில் இருந்து சுரக்கப்படுகிறது.
- இன்சுலின் ஆனது செல்கள் குளுக்கோஸை எடுத்துக் கொண்டு அதை ஆற்றலாக மாற்றி பயன்படுத்த உதவுகிறது.
- இன்சுலின் நம் உடலில் சரியாக சுரக்காமல் போனால் டயாபடிஸ் மெலிடஸ் என்ற சர்க்கரை நோய் உருவாகிறது.
விலங்குகளிலிருந்து இன்சுலின் பெறுதல்
- தற்போது இன்சுலின் rDNA தொழில்நுட்பம் மூலம் பெறப்படுகிறது.
- இந்த தொழில் நுட்பம் வருவதற்கு முன்பு பன்றிகள் மற்றும் பசுக்களின் கணையங்களில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டு, தூய்மைப்படுத்தப்பட்ட இன்சுலின் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு செலுத்தப்பட்டது.
- மனித இன்சுலின் மற்றும் பன்றி மற்றும் பசுவின் இன்சுலின் ஆகியவற்றிற்கு இடையே சிறிய அளவில் வேறுபாடு உள்ளது.
- இதனால் சில நோயாளிகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டது.
Similar questions