உரிமை வெளியீடு(rights issue) என்றால் என்ன?
Answers
உலக மனித உரிமைகள் சாற்றுரை (Universal Declaration of Human Rights) என்பது, 1948 ஆம் ஆண்டில் பாரிசில் உள்ள சைலட் மாளிகையில் வைத்து, ஐக்கிய நாடுகள் பொதுச்சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சாற்றுரை ஆகும். கின்னஸ் பதிவுகள் நூல், இதனை மிக அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட ஆவணம் எனக் குறிப்பிடுகிறது. இச் சாற்றுரை இரண்டாம் உலகப் போரில் இருந்து பெற்ற பட்டறிவுகளிலிருந்து உருவானது. அத்துடன், ஒவ்வொரு மனிதனுக்கும் இயல்பாகவே உரித்தாக உள்ள உரிமைகள் பற்றிய உலகளாவிய வெளிப்பாடும் இதுவே. இச் சாற்றுரையில் 30 பிரிவுகள் உள்ளன. இவை பின்னர் உருவாக்கப்பட்ட அனைத்துலக ஒப்பந்தங்கள், பிரதேச மனித உரிமைகள் ஆவணங்கள், தேசிய அரசியலமைப்புச் சட்டங்கள், பிற சட்டங்கள் என்பவை மூலம் விரிவாக்கப்பட்டன. மனித உரிமைகள் அனைத்துலகச் சட்டவிதி, அனைத்துலக மனித உரிமைகள் சாற்றுரையையும்; பொருளியல், சமூக, பண்பாட்டு உரிமைகளுக்கான அனைத்துலக ஒப்பந்தம், குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான அனைத்துலக ஒப்பந்தம் ஆகிய ஆவணங்களையும்; அதன் விருப்பத்தின் பேரில் கைக்கொள்ளக்கூடிய இரண்டு நடவடிக்கை விதிகளையும் உள்ளடக்கியுள்ளது.