Short speech on independence day in tamil
Answers
Answer:
‘1947, ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி’ என்பது ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும், நினைவிலும் நிற்கும் தினமாகக் கருதப்படுகிறது. அந்நாள், ‘நம்முடைய புதிய தேசத்தின் உதய நாள்’ மற்றும் ‘ஒரு புதிய தொடக்கத்தின் தொடக்க நாள்’ என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனென்றால், இறையாண்மைக் கொண்ட நாடாகத் திகழும் நமது இந்தியாவின் சுதந்திரம் என்பது, நூற்றுக்கணக்கான ஆன்மாக்கள் மற்றும் ஆயிரக்கணக்கானப் புரட்சியாளர்கள் மற்றும் தலைவர்களின் வெற்றி என்று பெருமையுடன் தலைநிமிர்ந்து சொல்லலாம். நமது தாய்நாடான இந்தியா சுதந்திரமடைந்து, சுமார் அரை நூற்றாண்டுகளையும் கடந்து, நாம் சுதந்திரமாக நமது தாய்மண்ணில் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு முதன்முதல் காரணம், நமது தேசிய தலைவர்களும், போராட்ட வீரர்களுமே! இருநூறு ஆண்டுகளாக, நமது நாட்டிலேயே நாம் அந்நிய தேசத்தவரிடம் அடிமைகளாக இருந்த போது, அவர்களை தைரியத்துடனும், துணிச்சலுடனும் பலரும் வீறு கொண்டு எதிர்த்து பல புரட்சிகளையும், கிளர்ச்சிகளையும், போர்களையும் நடத்தி, வெற்றியும், தோல்வியும் கண்டுள்ளனர்
Answer:
இந்திய சுதந்திர தினமானது கடந்து 1947-இல் இருந்து ஆகஸ்ட் 15-ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இது இந்தியர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். சுதந்திரதின கொண்டாட்டங்கள் இந்தியர்களுக்கு சுதந்திர போராட்ட வீரர்களை நினைவுட்டுடுவதோடு நாட்டுக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தையும் விதைக்கின்றது.
இந்தியா, பல தசாப்தங்களாக பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது. ஆங்கிலேயர்களின் கொடுங்கோன்மை காலப்போக்கில் அதிகரித்துக் கொண்டே இருந்தபோது பல இந்தியர்கள் பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடி அவர்களை நாட்டிலிருந்து விரட்ட முன்வந்தனர். சுதந்திர போராட்ட வீரர்களான பால் கங்காதர் திலக், பகத் சிங், மகாத்மா காந்தி, சரோஜினி நாயுடு, ராணி லக்ஷ்மி பாய் மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரின் தலைமையில், இந்திய குடிமக்கள் ஒன்று கூடி தங்கள் சுதந்திரத்திற்காக போராடினர்.
இந்தியர்கள், இந்த தலைவர்களால் ஈர்க்கப்பட்டு சுதந்திர போராட்டத்தில் தன்னலமின்றி பங்கேற்றனர். பல போராட்டங்கள் நடத்தப்பட்டு பல இயக்கங்கள் தொடங்கப்பட்டன. இந்த நிகழ்வுகளின் போது பலர் தங்கள் உயிர்களை இழந்தனர், மற்றவர்கள் சிறைக்குச் சென்றனர், இருப்பினும் இது பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடுவதற்கான தைரியத்தை குறைக்கவில்லை. சுதந்திர தினம் என்பது அவர்களின் தியாகங்களை நமக்கு நினைவூட்டுவதற்கான ஒரு தினமாகும்.
இதுபோன்ற பல்வேறு காரணங்களுக்காக சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. துல்லியமாகச் சொல்வதானால், தேசபக்தியின் உணர்வை உயிரோடு வைத்திருக்கவும், அதே நேரத்தில் சுதந்திர உணர்வை உணரவும் சுதந்திரதினம் கொண்டாடப்படுகிறது.
சுதந்திர தினம் என்பது நம் நாட்டில் ஒரு தேசிய விடுமுறையாகும், ஆகவே, இதை அணைத்து மக்களும் சாதி மதம் மொழி இனம் போன்ற எவ்வித வேறுபாடுமின்றி கொண்டாடுவோம்.