கதிரியக்கத்தின் SI அலகினை எழுதுக.
Answers
Answered by
0
கதிரியக்கத்தின் SI அலகு
- 1896 ஆம் ஆண்டு ஹென்றி பெக்ரோல் என்ற பிரெஞ்சு இயற்பியலாளர் யுரேனியத்தில் இயற்கை கதிரியக்கத்தினை கண்டுபிடித்தார்.
- யுரேனியம் ஒளிப்படத் தகட்டினை பாதிக்கும் அளவிற்கு சில கதிர்களை வெளியிடுவதை கண்டுபிடித்தார்.
- சில தனிமங்களின் நிலைப்புத் தன்மையற்ற உட்கருக்கள் சிதைவடைந்து சற்று அதிக நிலைப்புத் தன்மை உடைய உட்கருக்களாக மாறுகின்றன.
- இந்த நிகழ்விற்கு கதிரியக்கம் என்று பெயர்.
- கதிரியக்கம் இயற்கை கதிரியக்கம் மற்றும் செயற்கை கதிரியக்கம் என இரு வகைப்படும்.
பெக்கொரல்
- கதிரியக்கத்தின் பன்னாட்டு முறை அலகு பெக்கொரல் என அழைக்கப்படுகிறது.
- ஒரு பெக்கொரல் என்பது ஒரு வினாடி நேரத்தில் வெளியிடப்படும் கதிரியக்கச் சிதைவு ஆகும்.
- மேலும் கதிரியக்கத்திற்கு கியூரி, ராண்ட்ஜன், ரூதர்போர்டு முதலிய அலகுகளும் உண்டு.
Similar questions
Biology,
4 months ago
Physics,
4 months ago
Math,
10 months ago
Psychology,
1 year ago
English,
1 year ago