வருமுன் காப்போம் speech in tamil
Answers
Explanation:
Let's save before it comes-வருமுன் காப்போம்
Plz add brainlist
Answer:
வருமுன் காப்போம்
நீங்களே டாக்டராகச் செயல்படும் முன் இதைப் படியுங்கள். ஹெர்பல், டயட்ரி அல்லது நியூட்ரிஷனல் சப்ளிமென்ட்ஸ் ஆரோக்கிய பலன்களை தரலாம். ஆனால் அவை பாதிப்பு ஏற்படுத்தக் கூடியவையாகவும் இருக்கலாம் என்பது மட்டுமில்லாமல், மருந்துகளுடன் சேர்த்து சாப்பிடும்போது அவை உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்தக்கூடுமாம். அது ‘இயற்கை யானது’தான் என்றாலும், அது ‘பாதுகாப்பு’ தருவதாக இருக்க வேண்டுமென்பதில்லை என்கிறார் அமெரிக்கா, பாஸ்டனில் உள்ள நேச்சுரல் ஸ்டாண்டர்டு ரிசர்ச் கொலாப்ரேஷன் அமைப்பின் இணை நிறுவனரான கேதரீன் உல்பிரிக்ட். சப்ளி மென்ட்ஸ், சிகிச்சைக் கான பொருள்களை கலப்பதிலுள்ள ஆபத்து களைப் பற்றி நோயாளி களுக்கு டாக்டர்கள் கற்றுத்தர வேண்டும்.
பூண்டு நல்லது
கேம்பைலோபாக்டர் பாக்டீரியம் என்ற பாக்டீரியாவுக்கு எதிராகப் போராடுவதில் பிரபல ஆண்டி பயாடிக்குகளைவிட பூண்டில் உள்ள உள்பொருள்கள்100 மடங்கு அதிக பலன் தருவதை அமெரிக்கா, வாஷிங்டன் ஸ்டேட் யுனிவர்சிட்டி ஆராய்ச்சி யாளர்கள் கண்டுபிடித் துள்ளனர். இந்த பாக்டீ ரியாதான் உலகிலேயே உணவின் மூலம் ஏற்படும் பெரும்பாலான பெருங்குடல் பிரச்சினை களுக்குக் காரணமாக இருக்கிறது. இந்தத் தொற்றுக்களில் பலவும் பச்சையான, சரியாக சமைக்கப்படாத சிக்கன் அல்லது உணவு தயாரிக்கப் பயன்படுத்தப் பட்ட பாத்திரங்களின் மேற்பரப்பு மாசுபட்டிருப்பதால் ஏற்படுகின்றன.
சரியான மருத்துவம்
மார்பகப் புற்றுநோய் என்பது “ஒரே ஒரு நோய் அல்ல, 10 வெவ்வேறு விதமான நோய்கள்,” என்கிறது அதற்கான சிகிச்சையை தலைகீழாக மாற்றக்கூடிய ஒரு முக்கியமான ஆய்வு. மார்பகப் புற்றுநோய் உள்ள 2,000 பெண்களிடம் ஆய்வு நடத்திய சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழுவினர், சரியான மருந்துகளை உருவாக்கவும் உயிர்பிழைக்கும் சாத்தியத்தை மிகத் துல்லியமாகக் கணித்து இந்த சிகிச்சையை மேம்படுத்தவும், நோய்களை இப்படி வகை பிரித்துக் கொள்வது உதவும் என்கின்றனர்.
Explanation:
please make as a brainliest