Environmental Sciences, asked by madhumittha27, 11 months ago

speech in Tamil in the topic of LIVING WITH NATURE for about 2 minutes.. Thank you in Advance

Answers

Answered by harshimithu
17
இயற்கை வாழ்க

இயற்கை:
இயற்கை இயற்கையாகவே இருக்கிறது.
இயற்கையில் தான் எல்லாமே இருக்கிறது.
இயற்கையாகவே அதில் எல்லாம் இருக்கிறது.
இயற்கையாகவே அது பரிணமித்தது.
இது தான் மெய்ஞானமும்,விஞ்ஞானமும் கண்ட ஒரே ஒரு உண்மை.
அந்த இயற்கையின் பகுதிகள் தான் இந்த அண்ட சராசங்கள்,பஞ்ச பூதங்கள், அதில் ஒன்றான இந்த பூமி,தாவரங்கள்,அனைத்து கோடி ஜீவராசிகள், இறுதியாக தோன்றிய மனிதர்கள்.
இந்த இயற்கையில் எல்லாம் ஒன்றை ஒன்று சார்ந்த தான் இருக்கின்றன,அதன் விளைவாக எல்லாம் எப்போதும் ஒரு ஒழுங்கமைபோடு இயங்கி வருகின்றன,
இந்த ஒழுங்கமைப்பில் மாற்றம் வரும்போது தான் துன்பங்கள் ஏற்படுகின்றன.
இயற்கையின் ஒழுங்கமைப்பில் ஏற்படும் மாற்றம் தான் எல்லா துன்பங்களுக்கும் காரணம்,இதை உணராத ஒரே ஒரு இயற்கையின் வினோதமான பிராணி தான் மனிதன்.
இந்த 21 ம் நூற்றாண்டில் மனிதன் தன்னுடைய வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டு முழுமையாக இயற்கைக்கு எதிராகவும்,மாறாகவும் வாழ்ந்து வருகிறான்.அதன் விளைவாக இனிமேலும் இந்த பூமி இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்ற அவலமான ஒரு சூழ்நிலையை உருவாக்கியுள்ளான்.

இயற்கையின் ஒரு சிறு பகுதி தான், தான் என்ற உண்மையை உணராததன் காரணத்தால் தான் இயற்கைக்கு தன்னால் இயன்ற அளவிலான தீங்குகளை இழைத்தும்,தானும் துன்பப்பட்டு,இயற்கையில் உள்ள எல்லாவற்றையும் துன்பத்தில் ஆழ்த்தும் கொடிய செயல்களை மனிதன் செய்து வருகிறான்.
இதன் விளைவாக தான், பூமியை காப்பாற்ற பல போராட்டங்களும்,நடவடிக்கைகளும் தேவைபடுகின்ற ஒரு அவல நிலையில் நாம் வாழ்ந்து வருகிறோம்.
இதில் என்ன வெட்க கேடான விஷயம் என்றால் “உலகில் தான் வாழும் வீட்டையே(பூமி) அழித்து வாழ்கிற ஒரே ஒரு அதிசய பிராணி மனிதன்” மட்டும் தான். இதில் வியப்பிலும் வியப்பு என்ன என்றால் இந்த மனித பிறவிக்கு மட்டும் தான் பகுத்து அறிய கூடிய ஆறாவது அறிவு உள்ளது என்பது தான்.

PLS MARK MY ANSWER AS BRILLIANEST

madhumittha27: thank thanks a lot
madhumittha27: aama
Similar questions