World Languages, asked by shivermani05, 3 days ago

நம்பிக்கையே வெற்றி speech please answer nearly 10 to 12 lines i will mark you as branallist ​. In tamil

Answers

Answered by geetharani8387
0

Answer:

In question only Its there

Answered by shrawnisinha111
1

நொபுங்கா படை தளபதி தன் படை வீரர்களுடன் எதிரிகளை கண்டிப்பாக வீழ்த்த வேண்டும் என்று ஆர்வத்துடன் இருந்தார். எதிரிகளிடம் அதிக அளவில் படைபலம் இருந்தது. ஆனால் நொபுங்காவிடம் இல்லை. இதை அறிந்திருந்த நொபுங்காவின் படைவீரர்கள் மிகவும் அஞ்சினர். ஆனால் நொபுங்காவிற்கு தன் படைவீரர்களின் வீரம் தெரிந்திருந்ததால், அவர் நம்பிக்கையுடன் இருந்தார்.ஆகவே அவர் ஒரு ஜென் துறவியை பார்த்து, தன் படை வீரர்களுக்கு எவ்வாறு நம்பிக்கையை ஏற்படுத்துவது என்று கேட்கச் சென்றார். அதைக் கேட்ட ஜென் துறவி அந்த தளபதியிடம் "நீ படையை நடத்தி செல்லும் வழியில், ஒரு கோயிலுக்குள் சென்று வெளியே வந்து, உன் வீரர்களின் முன் இந்த நாணயத்தை கொண்டு போய் தலை விழுந்தால் நமக்கு வெற்றி நிச்சயம் என்று சொல்" என்று கூறினார்.

அதேப்போல் தளபதியும் செய்தார். அப்போது தலையும் விழுந்தது. இதனால் தம் மீது நம்பிக்கை இழந்திருந்த வீரர்கள், தலை விழுந்ததும், நம்பிக்கையுடன் போரில் போரிட்டனர். அவ்வாறு போரிட்டு, அவர்களும் வெற்றிப் பெற்றனர்.

சிறிது நாட்கள் கழித்து, தளபதியுடன் இருக்கும் வீரன் ஒருவன், "நம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம்" என்றான். ஆமாம் என்று கூறிய தளபதி, அவனிடம் அந்த நாணயத்தை காண்பித்தார்.

இக்கதையிலிருந்து, நம்பிக்கை இருந்தால், எத்தகைய போட்டி என்றாலும் வெற்றிப் பெறலாம் என்பது நன்கு வெளிப்படுகிறது.

Similar questions