Sutru purathooimai katturai with kuripu
Answers
சுற்றுப்புற தூய்மை கட்டுரை தமிழ்
குறிப்பு சட்டகம்
முன்னுரை
முன்னுரைநமது சுற்றுப்புறம்
முன்னுரைநமது சுற்றுப்புறம்நலவாழ்வும் சுற்றுப்புறமும்
முன்னுரைநமது சுற்றுப்புறம்நலவாழ்வும் சுற்றுப்புறமும்சுற்றுப்புறம் அசுத்தமடைதல்
முன்னுரைநமது சுற்றுப்புறம்நலவாழ்வும் சுற்றுப்புறமும்சுற்றுப்புறம் அசுத்தமடைதல்நோய்கள்
முன்னுரைநமது சுற்றுப்புறம்நலவாழ்வும் சுற்றுப்புறமும்சுற்றுப்புறம் அசுத்தமடைதல்நோய்கள்தடுக்கும் வழிமுறைகள்
முன்னுரைநமது சுற்றுப்புறம்நலவாழ்வும் சுற்றுப்புறமும்சுற்றுப்புறம் அசுத்தமடைதல்நோய்கள்தடுக்கும் வழிமுறைகள்முடிவுரை
முன்னுரை
நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால் எம்மை சுற்றி இருப்பவர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அது போலவே நாம் தூய்மையாக இருக்க வேண்டுமாயின் எமது சுற்று சூழலும் தூய்மையாக இருக்க வேண்டும்.
தூய்மையின் அவசியத்தை இன்று உலகம் மிகவும் ஆழமாக இன்று உணர்ந்திருக்கும். தூய்மை இல்லாமையின் விளைவு இன்று கொரோனா எனும் வடிவில் பல லட்சம் உயிர்களை காவு கொண்டு சென்றிருப்பது எம் அனைவருக்கும் சிறந்த பாடம் ஆகும். இக்கட்டுரையில் நாம் சூழலின் தூய்மை பற்றி நோக்குவோம்.
நமது சுற்றுப்புறம்
எமது சுற்றுப்புறம் எனப்படுகையில் நாம் வாழ்கின்ற வீடு, அதனை சுற்றி உள்ள முற்றம், வீட்டுத்தோட்டம், நாம் வேலைசெய்கின்ற அலுவலகங்கள், வேலை தளங்கள், பொது இடங்களான (பேருந்து தரிப்பிடம், வங்கிகள், வைத்தியசாலைகள், புகையிரத நிலையங்கள், பாடசாலைகள்) போன்ற இடங்கள் நாம் அன்றாடம் சென்று வருகின்ற சுற்றுப் புறங்களாகும்.
இவற்றில் ஏதேனும் ஒரு இடம் அசுத்தமாக காணப்பட்டாலும் அது எமது நலவாழ்வில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. ஒரு வளமான மண்ணில் நல்ல பயிரானது வளர்ந்து விளைவதனை போல நல்ல தூய்மையான சூழலில் தான் ஆரோக்கியமான மனிதர்கள் வாழமுடியும்.
நலவாழ்வும் சுற்றுப்புறமும்மனிதன் தனது வாழ்வில் சிறந்த உடல்நலம் மற்றும் உளநலம் போன்றனவற்றுடன் தனது அனைத்து தேவைகளையும் சரியாக பூர்த்தி செய்கின்ற வாழ்க்கையினை நலவாழ்வு எனலாம்.
இந்த சுற்றுப்புற சூழல் அழகாகவும் தூய்மையாகவும் காணப்படுகின்ற நாடுகளில் மனித நலவாழ்வு சுட்டி உயர்வாக காணப்படுகின்றது.
உதாரணமாக உலகில் உயர்வான நலவாழ்வு சுட்டி காணப்படுகின்ற நாடுகளான நோர்வே, சுவிட்சர்லாந்து, கனடா போன்ற நாடுகள் சுற்றுபுற தூய்மையை அதிகம் மதிக்கின்ற நாடுகளாக காணப்படுகின்றன.
மாறாக நைஜீரியா, மத்திய ஆபிரிக்கா போன்ற நாடுகள் சுற்றுசுழல் மாசடைவுகள் அதிகமாக உள்ளதனால் நலவாழ்வு சுட்டி மிகவும் குறைந்த நாடுகளாகவே காணப்படுகின்றன.
சுற்றுப்புறம் அசுத்தமடைதல்
எமது சுற்றுப்புற சூழல் எவ்வாறான வழிகளில் அசுத்தமடைய செய்யப்படுகிறது? என பார்ப்போமானால் முதலாவதாக நாம் கழிவுகளை சரியான முறையில் வெளியேற்றுவதில்லை குப்பைகளையும் கழிவுகளையும் வீதிகளிலும் பொது இடங்களிலும் வீசி எறிகின்றோம்.
நெகிழி பொருட்களை அதிகளவில் சுற்றுசூழலில் கொட்டுகிறோம் இவற்றினால் தான் சுற்றுபுறம் அதிகம் மாசடைகின்றது. நோய் கிருமிகள் அதிகமாக உருவாகின்றது. இதனால் தான் மனித ஆரோக்கியமானது பாதிக்கப்படுகின்றது.
நோய்கள்
சுற்று சூழல் மாசடைந்து காணப்படுவதனால் ஏராளமான நோய்கள் மனிதர்களுக்கு ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. குப்பைகளில் இருக்கும் கிருமிகளை ஈக்கள் அதிகம் காவி சென்று மனிதர்களுக்கு பரப்புவதனால் வாந்திபேதி, வயிற்றோட்டம் போன்ற நோய்கள் உருவாகின்றன.
மற்றும் குப்பைகள் நிறைந்த நீர் நிலைகளில் இருந்து நுளம்புகள் பெருகுவதனால் மலேரியா, டெங்கு, யானைக்கால் போன்ற நோய்கள் மனிதனுக்கு ஏற்படுகின்றன.
அசுத்தமான குப்பைகள் சூழலில் பரவுவதனால் தோல் சார்ந்த சொறி நோய்கள் ஏற்படுகின்றன. இவ்வாறான ஏராளமான நோய்கள் சுற்றுப்புற மாசடைவுகளால் ஏற்படுகின்றன.
தடுக்கும் வழிமுறைகள்
சுற்றுச்சூழல் மாசடைவுகளை நாம் தடுக்க வேண்டுமாயின் தனி மனிதர்கள் ஒவ்வொருவரும் தமது சுற்றுசூலை சுத்தமாக வைத்திருக்க முன்வரவேண்டும்.
கழிவுகளை குப்பை கூடைகளில் கொட்டி உரியமுறையில் அகற்றுதல் வேண்டும் வாரத்துக்கு ஒரு தடைவயேனும் தமது சுற்றுசூழலை சுத்தமாக வைக்க சிரமதானங்களை மேற்கொள்ளல்.
வாழிடங்களை துப்பரவாக கூட்டி கழுவி கிருமி அகற்றி வைத்திருத்தல், பொது இடங்களையும் சுத்தமாக வைத்திருத்தல். இவை போன்ற நடவடிக்கைகளால் சுற்றுப்புற மாசடைவுகளை தடுக்க முடியும்.
முடிவுரை
எமது வாழ்வில் நாம் ஆரோக்கியமாகவும் நலமாகவும் இருப்பது தான் மிகவும் பெறுமதியான விடயமாகும். இந்த ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் எம் அனைவருக்கும் முக்கிய பங்கு இருக்கிறது.
எனவே தான் சுற்றுப்புற சூழலை மனிதன் பாதுகாக்க வேண்டிய பெரும் கட்டாயத்தில் இருக்கின்றான். இன்றளவும் சூழல் மாசடைவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றன.
எனவே மனிதர்களாகிய நாம் தான் சிந்தித்து செயலாற்ற வேண்டும் சுற்றுசூழல் தூய்மையினை கவனத்தில் கொண்டு நாம் செயலாற்ற வேண்டும்.