Biology, asked by vievekananda5114, 9 months ago

Sutrusuzal about 10lines in tamil

Answers

Answered by LakshanaS
0

Explanation:

சுற்றுச்சூழல் பாதுகாப்பு (environmental protection) என்பது சுற்றசூழலை தனிமனிதனோ, அமைப்போ, அல்லது அரசாங்கமோ இயற்கை சூழலுக்காகவும், மனிதனின் நன்மைக்காகவும் பாதுகாக்கும் ஒரு பழக்கமாகும். மக்கள்தொகையினாலும் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் சுற்று சூழல் சில நேரங்களில் நிரந்தரமாக பாதிக்கப்படுகிறது. இதை உணர்ந்த அரசாங்கங்கள் சுற்றுச்சூழல் சீரழிவிற்கு காரணமான செயல்களைக் கட்டுப்படுத்தி நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளன. 1960 களில் இருந்து, சுற்றுச்சூழல் இயக்கங்களின் செயல்பாடுகள் பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. மனித நடவடிக்கைகளினால் சுற்றுச்சூழலில் தாக்கம் எந்த அளவிற்கு ஏற்படுகின்றது என்பது தெளிவாக தெரியவில்லை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் சில சமயங்களில் கடுமையாக விமர்சிக்கபடுகின்றன.

கல்வி நிறுவனங்கள் இப்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு முறைகள், சுற்றுச்சூழல்கல்வி, சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் போன்ற படிப்புகளை வழங்குகின்றன. பல்வேறு மனித நடவடிக்கைகளின் காரணமாக சுற்று சூழல் பாதுகாப்பு தேவைப்படுகின்றது. கழிவு உற்பத்தி, காற்று சூழல் மாசடைதல், மற்றும் பல்லுயிர் இழப்பு (நுண்ணுயிரிகளின் மற்றும் உயிரினங்களின் அழிவு) முதலியவை சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளாகும்.

சுற்றுச்சூழல் சட்டங்கள், நெறிமுறைகள் மற்றும் கல்வி மூன்றும் பின்னிப்பிணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு வழிவகுக்கின்றன. இந்த காரணிகளின் ஒவ்வொன்றும், தேசிய சுற்றுச்சூழல் முடிவுகள் மற்றும் தனிப்பட்ட சுற்றுச்சூழல் நடத்தைகளையும் பாதிக்கின்றன. உண்மையான சுற்றுசுழல் பாதுகாப்புக்கிடைக்க சமுதாயம் ஒன்றுபட்டு சுற்றுசூழலை பற்றிய முடிவுகளை எடுப்பது அவசியமாகின்றது.[1]

Answered by MickeyandMinnie
0

Answer:

Explanation:

மனிதன் உட்பட அனைத்து ஜீவன்களும் வாழ்வதற்கு ஏற்ற இடம்தான் இந்த புவிமண்டலமாகும். இந்த புவி மண்டலம் சீராக இயங்குவதற்கு ஐந்து வகையான ஏற்பாடுகள் அவை;

நிலம்

நீர்

காற்று

ஆகாயம்

நெருப்பு

இந்த ஐந்து வகையான ஏற்பாடுகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டுதான் வளம் வர இயலுமே தவிர இந்த ஒன்றில் ஏதாவது குறைபாடு ஏற்பட்டு விட்டால் இந்த உலகம் நாசத்தைத்தான் அதிகம் அடையும்.

சுற்றுச்சூழல் அல்லது உயிரியற்பியல் சூழல் என்பது ஒரு உயிரினத்தை அல்லது மக்கள் தொகையைச் சுற்றியுள்ள உயிர் உள்ள, மற்றும் உயிரற்ற கூறுகள் அனைத்தையும், அவற்றின் விளைவாக குறிப்பிட்ட உயிரினம் அல்லது மக்கள் தொகையின் பிழைப்புத் திறன், விருத்தி, படிவளர்ச்சி அல்லது கூர்ப்பு ஆகியவற்றில் தாக்கம் செய்யக்கூடிய அனைத்துக் காரணிகளையும் உள்ளடக்கிய இயற்கைச் சூழலைக் குறிக்கின்றது.[1] உயிரியற்பியல் சூழலானது நுண்ணோக்கி நிலையிலிருந்து, உலகளாவிய நிலைவரை வேறுபட்ட அளவுகளில் ஆராயப்படலாம். அத்துடன் சூழலின் இயல்பைப் பொறுத்து பெருங்கடல் சூழல், வளிமண்டலச் சூழல், நிலச் சூழல் போன்ற பல வேறுபட்ட சூழல்களைக் காணலாம்.[2] ஒவ்வொரு தனி உயிரினமும், தனக்கான ஒரு சூழலைக் கொண்டிருக்கின்றது எனக் கொண்டால், எண்ணிக்கையில்லா உயிரியற்பியல் சூழல்கள் இருப்பதை அறியலாம்.

சுற்றுச்சூழல் என்ற சொல்லை சமூகச் சூழல், பொருளாதார சூழல் என்ற சொற் பதங்களுடன் ஒப்பிட்டு வேறுபாடு காணலாம். பல சமயங்களில் சூழல் என்ற சொல் இயற்கை சுற்றுசூழலையே சுட்டி நிற்கும். சுற்றுசூழலை சூழ்மை என்றும் குறிப்பிடலாம்.

Similar questions