India Languages, asked by AdiBan3016, 9 months ago

Tamil essay about environment clean

Answers

Answered by Anonymous
1

Explanation:

ஒவ்வொரு வீட்டிலும் கழிவுகளை உருவாக்குவதால், நமது சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்க நாம் செய்யக்கூடியவை ஏராளம், எல்லா இடங்களிலும் கழிவுகளை வீசுவதைத் தவிர்க்க வேண்டும். குப்பை நம் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது, குறிப்பாக பிளாஸ்டிக் பைகள். ... நம் சூழலை அழகாக மாற்ற மரங்களையும் தாவரங்களையும் நட்டு மட்டுமே பசுமையான சூழலை பராமரிக்க முடியும்

Answered by Madalasa22
1

Explanation:

சுற்றுச்சூழல் பாதுகாப்பு) (environmental protection) என்பது சுற்றசூழலை தனிமனிதனோ, அமைப்போ, அல்லது அரசாங்கமோ இயற்கை சூழலுக்காகவும், மனிதனின் நன்மைக்காகவும் பாதுகாக்கும் ஒரு பழக்கமாகும். மக்கள்தொகையினாலும் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் சுற்று சூழல் சில நேரங்களில் நிரந்தரமாக பாதிக்கப்படுகிறது. இதை உணர்ந்த அரசாங்கங்கள் சுற்றுச்சூழல் சீரழிவிற்கு காரணமான செயல்களைக் கட்டுப்படுத்தி நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளன. 1960 களில் இருந்து, சுற்றுச்சூழல் இயக்கங்களின் செயல்பாடுகள் பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. மனித நடவடிக்கைகளினால் சுற்றுச்சூழலில் தாக்கம் எந்த அளவிற்கு ஏற்படுகின்றது என்பது தெளிவாக தெரியவில்லை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் சில சமயங்களில் கடுமையாக விமர்சிக்கபடுகின்றன.

கல்வி நிறுவனங்கள் இப்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு முறைகள், சுற்றுச்சூழல்கல்வி, சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் போன்ற படிப்புகளை வழங்குகின்றன. பல்வேறு மனித நடவடிக்கைகளின் காரணமாக சுற்று சூழல் பாதுகாப்பு தேவைப்படுகின்றது. கழிவு உற்பத்தி, காற்று சூழல் மாசடைதல், மற்றும் பல்லுயிர் இழப்பு (நுண்ணுயிரிகளின் மற்றும் உயிரினங்களின் அழிவு) முதலியவை சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளாகும்.

சுற்றுச்சூழல் சட்டங்கள், நெறிமுறைகள் மற்றும் கல்வி மூன்றும் பின்னிப்பிணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு வழிவகுக்கின்றன. இந்த காரணிகளின் ஒவ்வொன்றும், தேசிய சுற்றுச்சூழல் முடிவுகள் மற்றும் தனிப்பட்ட சுற்றுச்சூழல் நடத்தைகளையும் பாதிக்கின்றன. உண்மையான சுற்றுசுழல் பாதுகாப்புக்கிடைக்க சமுதாயம் ஒன்றுபட்டு சுற்றுசூழலை பற்றிய முடிவுகளை எடுப்பது அவசியமாகின்றது.

Hope it helps you

pls mark as brainliest answer

follow me too for more answers

Similar questions