Political Science, asked by dilpreetkaur86, 11 months ago

Tamil palamolikal which is useful for tamil katturai

Answers

Answered by mersalkeerthi46
0

"உப்புத்தான் கொஞ்சம் ஏற-இறங்க இருந்தாலும் ஒரே கரிப்பு, அல்லது ஒரே சப்பு. ’உவர்ப்பு’ என்கிறதைப் பேச்சில் ’கரிப்பு’ என்றே சொல்லுகிறோம். இலக்கண சுத்தமான வார்த்தையாக ’உவர்ப்பு’க்குக் ’கார்ப்பு’ என்றும் பெயர் இருக்கிறது. அதுதான் பேச்சு வழக்கில் ’கரிப்பு’ ஆகிவிட்டது. ’உப்புக் கரிக்க’ என்கிறோம். அப்படி, உப்புப் போட்ட வியஞ்ஜனங்களில் அது கொஞ்சம் ஏறினாலும் ஒரே கரிப்பு, கொஞ்சம் குறைந்தாலும் ஒரே சப்பு என்று ஆகிவிடுகிறது. உப்பு ஏறிப் போய்விட்டால் ஒன்றும் பண்ணிக்கொள்ள முடியாது. ஆனால், குறைந்தால் மற்ற ருசிகளைத் தருகிற புளி, மிளகாய் முதலானதை இலையில் கலந்துகொள்ள முடியாமலிருக்கிற மாதிரி இங்கே இல்லை. உப்பு ருசி குறைந்தால் மட்டும் அந்த உப்பையே கொஞ்சம் இலையில் சேர்த்துக் கலந்துகொண்டால் போதும். க்ஷணத்திலே அது கரைந்து ஸரிப் பண்ணிவிடும். நாம் ஆஹாரத்தில் ருசித் தப்பு நேர்ந்தால் மூல வஸ்துவை நேராகச் சேர்த்து, உடனே தப்பை ஸரியாகப் பண்ணிக்கொள்வது இது ஒன்றில்தான். ஆனபடியால் அந்த ஒரு குறைபாட்டை, சாப்பிடுபவர் தங்களிடம் சொல்லி, தாங்கள் பல பேருக்குப் பரிமாறிக் கொண்டிருக்கும்போது அவர்களைக் காக்கவைத்து, அல்லது அவர்களுக்காக பிறத்தியாரைக் காக்கவைத்து, அவர்களுக்குப் போடுவதாக இருக்க வேண்டாமென்று நம்முடைய பூர்வகால முப்பாட்டிப் புத்திசாலி க்ருஹலக்ஷ்மிகள் நினைத்திருக்கிறார்கள். அதனால் சாப்பிடுபவரே உப்புப் போதாத குறையை நிவர்த்தி பண்ணிக்கொள்ள வசதியாக இலையில் மற்ற வ்யஞ்ஜனங்கள் பரிமாறுகிறதற்கு முந்தி முதலிலேயே கொஞ்சம் உப்புப்பொடி வைத்துவிடுவார்கள். அதைக் குறிப்பாக மனஸில் கொண்டுதான் நமக்குச் சாப்பாடு போடுகிறவர்களிடம் என்றென்றும் நன்றியுடன் இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறபோது ’உப்பிட்டவர உள்ளளவும் நினை’ என்றார்கள்.

Answered by Anonymous
4

Answer:

Hey mate here is your answer,

  1. அகல உழுகிறதை விட ஆழ உழு.
  2. அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.
  3. அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
  4. அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
  5. அடாது செய்தவன் படாது படுவான்.
  6. அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
  7. அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
  8. அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.
  9. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
  10. அறச் செட்டு முழு நட்டம்.அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.

I think this may help you mate

Similar questions