Tamil poem quotes about Biodiversity conservation.
Answers
Answer:
பல்லுயிர் வாழ்நிலை என்பது நிலம், கடல், பிற நீர்நிலைகள் உட்பட பூமியில் வாழும் பல்வகை உயிரினங்களை உள்ளடக்கியது தான் பல்லுயிரினங்கள் ஆகும். பல்லுயிர் வாழ்நிலை என்பது மொத்தம் மூன்று நிலைகளைக் கொண்டதாகும். அவை மரபணு ரீதியான பன்முகத்தன்மை, (உயிரினங்களுக்குள்) உயிரின பன்முகத்தன்மை, (உயிரினங்களுக்கிடையே) சுற்றுச்சுழல் அமைப்பு பன்முகத்தன்மை ஆகும்.
மிகப்பெரிய பல்லுயிர் வாழ்நிலைகளைக் கொண்ட 17 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். உலகில் ஒட்டு மொத்த நிலப்பரப்பில் 2.4 சதவீதமும், நீர்ப்பரப்பில் 4 சதவீதமும் இந்தியாவில் உள்ளது. உலகில் பதிவு செய்யப்பட்ட உயிரினங்களில் 7 முதல் 8 சதவீதம் இந்தியாவில்தான் இருக்கின்றன.
அரிசி, பருப்பு, தானியங்கள், காய்கறிகள், பழங்கள், நார்தாவரங்கள் உள்ளிட்ட ஒன்றுடன் ஒன்று நெருக்கமான உறவு கொண்ட 375 வகை தாவரங்கள் தோன்றிய 8 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். மாடுகள், செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள், ஒட்டகங்கள், குதிரைகள், கோழியினங்கள் என 255 வகையான உயிரினங்கள் இந்தியாவில் தான் கண்டறியப்பட்டன. கலாச்சார பன்முகத் தன்மையில் வளமாக உள்ள இந்தியா, பழங்குடியின மக்களிடமுள்ள பாரம்பரிய அறிவிலும் அதிக வளத்துடன் காணப்படுகிறது