India Languages, asked by vaniviji0653, 4 months ago

Tamil project.
தலைப்பு: இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும் என்ற தலைப்பில் ஒளிப்படி இயந்திரம், தொலைநகல் இயந்திரம், தானியக்கப் பண இயந்திரம், அட்டை
பயன்படுத்தும் இயந்திரம், தமிழக அரசின் நியாயவிலைக்
கடை,
_ திறனட்டைக் கருவி, ஆளறிசோதனைக் கருவி, இணைய வணிகம், இந்தியத் தொடர் வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழக இணைய வழிப் பதிவு இவற்றைப் பற்றிய விவரங்கள் வேண்டும்..



if you don't know the language stay away
don't say a I don't know your language
don't stamp on my question is important
if you can help

I need details about internet uses and importance
step by step in Tamil
not in English
if any Tamil peoples present here please help me to collect details
here are so many topics you can answer any two topics which you know
I will gather details about it..​

Answers

Answered by ranimasala934
4

Answer:

ஒளிப்படி இயந்திரம் :

வணிகம், அரசு, கல்வி, தனியார் அலுவலகங்கள் என அனைத்துத் துறைகளிலும் நகல் எடுக்கப் பயன்படுகின்ற முக்கியமான இயந்திரம் இது. அனைவரும் இதனை ஜெராக்ஸ் என்று பொதுவாகக் கூறுவது வழக்கத்தில் உள்ள சொல்.

நியூயார்க்கைச் சேர்ந்த காப்புரிமைச்சட்ட வல்லுநரும் பகுதி நேர ஆய்வாளருமான செஸ்டர் கார்ல்சன், தம் தொழிலுக்காக நிறையக் காதிதங்களைப்படி எடுக்க வேண்டியிருந்தது. அந்தப் பணிச்சுமையே அவரை இப்புதிய கண்டுபிடிப்பை நோக்கித் தள்ளியது. மின்னணுப் புகைப்பட ஆய்வுகளுக்குத் தமது சமையலறையையே அவர் பயன்படுத்திக்கொண்டார். கந்தகம் தடவியதுத்தநாகத் தட்டைக்கொண்டு, 1938இல் உலகின் முதல் ஒளிப்படியை எடுத்தார். கிரேக்க மொழியில் சீரோகிராஃபி என்றால் உலர் எழுத்துமுறை என்று பொருள். அவரால் 1959இல் இந்த ஜெராக்ஸ் இயந்திரம் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று, பல பெரிய நிறுவனங்கள் ஒளிப்படி எடுக்கும் கருவிகளை உருவாக்கி விற்பனை செய்தாலும் அவற்றுக்கு ஜெராக்ஸ் என்ற பெயரே நிலைத்து விட்டது.

ஆளறிசோதனைக் கருவி :

ஆளறிசோதனைக் கருவி மனிதனின் கைரேகை, முகம், விழித்திரை ஆகியவற்றில் ஒன்றையோ அனைத்தையுமோ அடையாளமாகப் பதிவு செய்யவும் பதிவு செய்த அடையாளம் மூலம் மறுபடி ஆளை அறியவும் பயன்படுகிறது. நடுவண் அரசின் ஆதார் அடையாள அட்டையைப் பெறுவதற்கு நம்முடைய ஒளிப்படத்தையும் விழித்திரையையும் இரு கைகளின் பத்து விரல் ரேகை களையும் பதிவு செய்கிறோம். அரசு நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் வருகைப் பதிவுக்காகவும் வெளியேறுகைப் பதிவுக்காகவும் இக்கருவி பயன்படுகிறது.


ranimasala934: super
vaniviji0653: mm
ranimasala934: what school you
vaniviji0653: freedom concept school
vaniviji0653: you
ranimasala934: SDA Chengalpattu
vaniviji0653: chengalpattu aa naan Vellore
ranimasala934: ok
vaniviji0653: mm
Answered by smanojkumar93619
1

Answer:

அறிவியல் முன்னேற்றத்தால், மனிதனின் பயணநேரம் குறைந்துள்ளது. அறிவியல் கண்டுபிடிப்புகள் நமது நேரத்தைப் பலவழிகளிலும் மிச்சப்படுத்துகின்றன. கணினிப் பயன்பாடு மிகுந்துள்ளதால் சமையல் எரிவாயு பதிவு செய்வது, மின் கட்டணம் செலுத்துவது, பயணத்திற்கு முன்பதிவு செய்வது போன்ற செயல்களுக்குகாக நேரில் சென்று வரிசையில் நிற்பது குறைந்துள்ளது. அங்காடிகளுக்குச் சென்று பொருள்களை வாங்குவதும்கூட இணையவழியில் தொடங்கிவிட்டது. தெருவுக்குத் தெரு 24x7 தானியங்கிப் பண இயந்திரமும் கடைக்குக் கடை வங்கி அட்டைகள் பயன்படுத்தும் இயந்திரமும் புழக்கத்திற்கு வந்துவிட்டன. இந்த இயந்திரங்களின் பின்னால் இருப்பது கணினி யுகத்தின் கண்ணுக்குத் தெரியாத இணைய வலை! இணைப்பு அலை!

Similar questions