tamilanin perumaigal essay in Tamil
Answers
Answered by
0
Answer:
தமிழர் அடையாளம் தமிழ் மொழியை அடிப்படையாக் கொண்டது. தமிழை தாய் மொழியாகக் கொண்ட அனைவரும் தமிழர்என்பதுவே தமிழர் அடையாளத்தின் அடிப்படை வரையறை. தமிழ் மொழியை அறிந்திரா விட்டாலும் தமிழர் பண்பாடு அல்லது தமிழர் பின்புலத்தில் இருந்து வந்து தம்மை தமிழர் என்று அடையாளப்படுத்துவோரும் தமிழர் ஆவர். தமிழர் தாயக நிலப்பரப்புகளான தமிழ்நாடு மற்றும் தமிழீழம் ஆகியவற்றில் வசித்து, தமிழ் மொழி பேசி தம்மை தமிழர் என்று அடையாளப்படுத்தினால் அவர்களும் தமிழர் ஆவர்.
தமிழர் அடையாளம் தொடர்பான வரையறைகள் வெவ்வேறு பார்வைகளுக்கும் மாற்றத்துக்கும் உட்பட்டு நிற்பவை. தமிழர் அடையாளம் நிரந்தர வரையறையற்றது, இயங்கியல் தன்மை கொண்டது. பல்வேறு தளங்களில் வெவ்வேறு வரையறைகளை அல்லது வெளிப்படுத்தல்களை கொண்டது
Similar questions