India Languages, asked by vamshi6563, 9 months ago

thunaivinai saandru tharuga

Answers

Answered by pandian47
0

Answer:

  1. துணைவினை என்பது, இன்னொரு வினையுடன் சேர்ந்து வருகின்ற நிலையில், தன் பொருளை இழந்து சேர்ந்துவரும் வினைக்குப் புதிய பொருளைத் தரும் வினைச்சொல் ஆகும்.
  2. இவ்வாறான பொருள் இலக்கணப் பொருள் எனப்படும்.

சான்று

சான்றாகப் பார் என்னும் வினைச்சொல் ‘பார்த்தல்’ அல்லது ‘காணுதல்’ என்ற தனிப்பொருள் போன்றே இரு, பாடு, ஆடு, செய், அழு, தள்ளு போன்ற வினைச்சொற்களும் தமக்கென்று தனித்தனியே பொருள் உடையன. இத்தகைய வினைச்சொற்களுள் சில, வேறு வினைச்சொற்களுடன் இணைந்து வருதலும் உண்டு. அவ்வாறு இணைந்து வரும்பொழுது, அவை தமக்குரிய தனிப்பொருளை இழந்து, தாம் சேர்ந்து வரும் வினைச்சொற்களுக்குப் புதிய பொருளைத் தருவனவாய் அமைகின்றன. இத்தகு புதிய பொருளை மொழியியலார் இலக்கணப்பொருள் என்று குறிப்பிடுகின்றனர். இவ்வாறு தம்பொருளை இழந்து, இலக்கணப்பொருளைத் தருகின்ற நிலையில் வரும் வினைச்சொற்களையே துணைவினைகள் என்று மொழியியலார் கூறுகின்றனர்.

Similar questions