V பின்வரும் வினாக்களுக்கு விரிவான
விடையளிக்கவும்
1 முதல் உலகப்போருக்கான முக்கியக்
காரணங்களை விவாதி.
2. ஜெர்மனியுடன் தொடர்புடைய வெர்செய்ல்ஸ்
உடன்படிக்கையின் சரத்துக்களை
கோடிட்டுக்காட்டுக.
இணையச் செயல்
Answers
முதல் உலகப்போர் என்பது உலகம் தழுவிய அளவில் இடம்பெற்ற ஒரு போர். எனினும் இது பெரும்பாலும் ஐரோப்பாவிலேயே நடைபெற்றது. இப் போரில் நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் மைய நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளும் எதிர்ப் பக்கங்களில் நின்று போரிட்டன. இதன் அளவும், செறிவும் முன்னெப்பொழுதும் இல்லாத அளவு பெரிதாக இருந்தது. பெருமளவினர் சண்டையில் ஈடுபட்டிருந்ததோடு பெரும் தொகையில் இழப்புகளும் ஏற்பட்டன. 60 மில்லியன் ஐரோப்பியர்களை உள்ளடக்கிய சுமார் 70 மில்லியன் போர்வீரர்கள் சண்டையில் ஈடுபட்டிருந்தனர். புதிய தொழில்நுட்பங்களின் வழிவந்த இயந்திரத் துப்பாக்கிகள், உயர்தரமான கனரகப் பீரங்கிகள், மேம்பட்ட போக்குவரத்து, நச்சு வளிமம், வான்வழிப் போர்முறை, நீர்மூழ்கிகள் என்பன போரின் தாக்கத்தைப் பெரிதும் அதிகப்படுத்தின. போரில் 40 மில்லியன் பேருக்குக் காயங்களும் உயிரிழப்புக்களும் ஏற்பட்டன. இதில் குடிமக்களும், போராளிகளுமாகச் சுமார் 20 மில்லியன் பேர் இறந்தனர். போரினால் ஏற்பட்ட, முற்றுகைகள், புரட்சிகள், இன ஒழிப்பு, நோய்த் தொற்றுக்கள் என்பன மக்களுடைய துன்பங்களை மேலும் அதிகப்படுத்தின. இப் போர் 1914ம் ஆண்டு முதல் 1918ம் ஆண்டு வரை நடைபெற்றது.
வெர்சாய் ஒப்பந்தம் (Treaty of Versailles) முதலாம் உலகப்போரை முடிவுக்குக் கொண்டுவந்த சமாதான ஒப்பந்தங்களில் மிக முக்கியமான ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம் செருமனி மற்றும் அதனுடன் இணைந்த கூட்டணி சக்திகளுக்கு இடையேயான யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. ஆசுத்திரிய மன்னனின் மகனான பிரான்சு பேர்டினண்ட் படுகொலை செய்யப்பட்டு சரியாக ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், 1919 ஆம் ஆண்டு சூன் 28 அன்று பிரான்சிலுள்ள வெர்சாயில் இவ்வொப்பந்தம் கையெழுத்தானது. முதலாம் உலகப் போரில் செருமனிக்கு ஆதரவாகப் போரிட்ட மற்ற மைய சக்திகள் தனித்தனி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன [1].1918 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் நாள் ஏற்படுத்தப்பட்ட போர் ஓய்வு சமரச ஒப்பந்தம் உண்மையில் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. ஆயினும், பாரிசு அமைதி மாநாட்டில் இடம்பெற்ற சமாதான பேச்சு வார்த்தைகள் முடிந்து அமைதி ஒப்பந்தம் முடிவு செய்யப்படுவதற்கு ஆறு மாதங்கள் பிடித்தன. உலகநாடுகள் கூட்டமைப்பின் தலைமைச் செயலகத்தால் 1919 ஆம் ஆண்டு அக்டோபர் 21 இல் இவ்வொப்பந்தம் பதிவு செய்யப்பட்டது