ஒரு நாடு, ஒரே மாதிரியான வரி என்பதை எந்த வரி உறுதிப்படுத்துகிறது? அ) மதிப்புக் கூட்டு வரி (VAT) ஆ) வருமான வரி இ) பண்டங்கள் மற்றும் பணிகள் வரி ஈ) விற்பனை வரி
Answers
Answered by
1
பண்டங்கள் மற்றும் பணிகள் வரி
- பண்டங்கள் அல்லது பணிகளை நுகர்வோர் வாங்கும் போது விதிக்கப்படும் வரியே பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (GST) ஆகும்.
- பண்டங்கள் மற்றும் பணிகள் வரி ஆனது ஜூலை 1, 2017 அன்று நடைமுறைக்கு வந்தது.
- ஒரு நாடு ஒரு அங்காடி ஒரு வரி என்பதே பண்டங்கள் மற்றும் பணிகள் வரியின் இலக்கு ஆகும்.
- இதன் நோக்கம் மத்திய மற்றும் மாநில அரசினால் பண்டங்கள் மற்றும் பணிகளுக்கு விதிக்கப்படும் அனைத்து மறைமுக வரிகளையும் மாற்றுவது ஆகும்.
- GST வரி ஆனது பண்டங்கள் மற்றும் பணிகளின் உற்பத்தி மற்றும் வழங்குதல் மீதான வரிகளின் அடுக்கு விளைவுகளை நீக்க உதவுகிறது.
- GST வரி ஆனது ஒரு முனை வரி ஆகும்.
Similar questions