Vizhippana india and sezhippana India katturai in tamil
Answers
Answer:
ஒரு தேசமாக இந்தியாவை அதன் முழு ஆற்றலையும் அடையும் நிலைக்குக் கொண்டு வருவதே நமது நோக்கம். அதன் ஆற்றல் துல்லியமாக என்னவென்று நாம் தெரிந்திருக்க வேண்டியதில்லை. ஆனால் அதன் ஆற்றலையும் எதிர்பார்ப்புகளையும் கணக்கில் கொள்ளும்போது, மிகக் குறைவாகவே இதுவரை சாதித்து வந்துள்ளது. அதனுடைய மோசமான செயல்திறனுக்கு அதன் அரசியல் தலைமையே பொறுப்பு என்பதை நாம் போதிய உறுதியுடன் கூறமுடியும். ஆதலால், இந்தியா தன்னுடைய ஆற்றலை உணரத் தேவையான உடனடி மாற்றம் அதன் ஆட்சிமுறை தரத்தின் முன்னேற்றமே. அதாவது, நாம் நல்ல தலைவர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் அதன் அர்த்தம். ஆகையால், தகுதிவாய்ந்த, தொலைநோக்குப் பார்வைகொண்ட, அர்ப்பணிப்புள்ள மக்களைத் தலைமைப் பதவிகளுக்கு அறிவுப்பூர்மாக தேர்ந்தெடுக்க வேண்டியது நம் கையில் உள்ளது.
உண்மையான தேவை:
இந்திய ஆட்சிமுறை அமைப்பின் மாற்றம்தான் நம்முடைய உண்மையான தேவை என்பதை முறையாக வாதிட முடியும். அமைப்பில் ஏன் மாற்றம் தேவை? ஏனெனில் அமைப்பில் மாற்றம் இல்லை என்றால், தொடர்ந்து பழைய மாதிரியான ஆட்களே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அரசியலில் சமூக விரோதிகள் நுழையக் காரணம், தற்போது உள்ள அரசியல் அமைப்பு திருடர்களுக்கு வெகுமதி அளிப்பதாகவும், நேர்மையான மக்களை தண்டிப்பதாகவும் இருப்பதுதான்.நாம் என்ன செய்கிறோம் என்பது, நாம் என்ன தெரிந்து வைத்துள்ளோம் என்பதைப் பொறுத்தது. ஆகையால் செயல்படுவதற்கு முன், சூழ்நிலை என்ன என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். எல்லாப் பயணங்களையும் போல், எங்கு தற்போது இருக்கிறோமோ அந்த இடத்தில் இருந்துதான் இதையும் ஆரம்பிக்க முடியும். இப்போது இருக்கும் நிலையில் இல்லாமல் நமது இலக்குக்கு அருகில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று கனா காண்பது எதற்கும் உதவாது. செயல்படாத அரசாங்க அமைப்பை நாம் கொண்டுள்ளோம் என்பதே நாம் செயல்பட ஆரம்பிக்க வேண்டிய இடம்.
தகுதியற்ற ஆட்சியாளர்கள்:
நாட்டை ஆளும் பொறுப்பில் இருப்பவர்கள் தகுதியற்றவர்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர்கள் அப்படி இல்லாமல் இருந்திருந்தால் நாம் இன்று இருப்பது போல பரிதாபகரமான நிலையில் இருந்திருக்கப் போவதில்லை. ஒரு குறிப்பிட்ட வேலைக்குத் தேர்ச்சி இல்லை என்பது குற்றம் அல்ல. ஆனால் நாட்டின் ஆளுகை போன்ற அதிக முக்கியத்துவம் நிறைந்த விஷயத்தில், தேர்ச்சியின்மை ஒரு குற்றமாகவே கருதப்பட வேண்டும். அதிலும், ஆனால் குற்றவாளியாக இருந்துக் கொண்டு நாட்டின் திட்டங்களை உருவாக்கும் பணியில் இருப்பது கண்டிப்பாகக் குற்றமே. இந்திய அரசியலில் சற்று அதிகமாகவே குற்றவாளிகள் உள்ளனர். அதுவே நமது செயல்பாட்டின் ஆரம்பப் புள்ளி.
ஊழலுக்கும், அரசாங்கக் கட்டுபாடுகளுக்கும் உள்ள தொடர்பை சரியாகப் புரிந்துகொள்ளக்கூடிய நடுத்தரவர்க்க, கல்வியறிவு பெற்ற மக்கள்தொகை இப்போது கணிசமாக உள்ளது. புரிந்துகொள்வதும், புரிந்துகொள்ளும் ஆற்றல் இருப்பதும் ஒன்றல்ல. இதுவரை இந்தத் தொடர்பு அவர்களுக்குச் சரியான முறையில் விளக்கப்படவில்லை என்பதுதான் பிரச்னை. தற்போதைய கல்வி அமைப்பு, பகுப்பாய்வு செய்யும் திறனுடன் சிந்திப்பதற்கு மக்களைத் தயார்படுத்தவில்லை. அது மட்டுமா, எதையும் அவர்களாக உணர முடியாத அளவுக்கு அவர்கள் சாப்பாடு விஷயங்களாலும், சாகஸங்களாலும் (சரி உங்களுக்கு பிடிக்கும் என்றால் பீட்ஸா, கிரிக்கெட் என்பதாக வைத்துக் கொள்வோம்) அதிகமாகவே திசைதிருப்பப் பட்டவர்களாக உள்ளனர். ஒருவேளை அதைப் புரிந்துகொண்டவர்கள் இருந்தாலும், அவர்கள் எண்ணிக்கை வெகு சொற்பமாகவே உள்ளது. இதில் இன்னும் மோசமான விஷயம், அந்தச் சொற்ப எண்ணிக்கையில் உள்ள மக்கள்கூட தங்களின் ஆதங்கத்தை வெளிக்காட்ட எந்த அக்கறையும் கொள்ளாததுதான்.
சமூக விரோதிகள் பதவியில் நீடிப்பதற்கு என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொள்ளும்போது, கதை இன்னும் இருண்டதாக ஆகிறது. அவர்கள் பொருளாதாரத்தின் உற்பத்தி செய்யும் பகுதிகளுக்கு வரி விதித்து, உற்பத்தியற்ற பகுதி மக்களுக்குச் சலுகைகள் வழங்குகின்றனர். அதற்குக் கைமாறாக அவர்களுடைய ஆதரவைத் தேர்தல்களில் அறுவடை வருகின்றனர். பழமொழியில் சொல்வதைப் போல், ராமுவிடம் திருடி சோமுவுக்கு கொடுப்பது எப்போதும் சோமுவின் ஆதரவை உறுதிப்படுத்தும்.
தேவையான சீர்திருத்தங்கள்:
இந்தியா ஆளப்படும் முறையில் பெருத்த மாற்றங்களைக் கொண்டு வரக்கூடிய, ஜனநாயக வழியை நடைமுறைப்படுத்தக்கூடிய சீர்திருத்தங்களை நம்மால் எளிதாக் கற்பனை செய்ய முடியும்.
Explanation:
புத்திசாலியாக தேர்வு செய்யவும், மேலும் பல விடைகளுக்கு பின் தொடரவும்.