water about in tamil
Answers
Answer:
என்பது H2O என்ற வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதியியல் சேர்மமாகும். நிறமற்றும், நெடியற்றும், ஒரு ஒளிபுகும் தன்மையுடனும் உள்ளது இச்சேர்மத்தின் தோற்றப் பண்புகளாகும். புவியிலுள்ள ஓடைகள், ஏரிகள், கடல்கள், அனைத்தும் பெரும்பாலும் நீராலேயே ஆக்கப்பட்டுள்ளன. மேலும் உலகில் காணப்படும் உயிரினங்கள் அனைத்திலும் நீரானது நீர்மவடிவில் காணப்படுகிறது. உயிரினங்களின் உடலுக்கு ஆற்றலையோ, கனிம ஊட்டச்சத்துகள் எதையுமோ நீர் தருவதில்லை என்றாலும் அவ்வுயிரினங்கள் உயிர் வாழ்வதற்கு நீர் அத்தியாவசியமானதாகும். ஒரு நீர் மூலக்கூற்றில் ஓர் ஆக்சிசன் அணுவுடன் இரண்டு ஐதரசன் அணுக்கள் சகப் பிணைப்பு மூலம் பிணைக்கப்பட்டுள்ளன. தட்பவெப்ப அழுத்தத்தில் இது ஒரு நீர்மமாக இருந்தாலும் திடநிலையில் இது பனிக்கட்டியாகவும் வாயு நிலையில் நீராவியாகவும் காணப்படுகிறது. மழை வடிவில் இது பூமியில் வீழ்படிவாகவும் மூடுபனியாக தூசுபடலமாகவும் உருவாகிறது. நீர்ம நிலைக்கும் திடநிலைக்கும் இடைப்பட்ட தொங்கல் நிலையிலுள்ள நீர்த்துளிகள் மேகங்களாக மாறுகின்றன. இறுதியாக இந்நிலையிலிருந்து பிரிந்து படிகநிலைப் பனிக்கட்டி வெண்பனியாக வீழ்படிவாகிறது. நீரானது தொடர்ச்சியாக நீராவிபோக்கு, ஆவி ஒடுக்கம், வீழ்படிவு போன்ற செயல்களுடன் நீர்ச்சுழற்சிக்கு உட்பட்டு இயங்கிக்கொண்டே கடலைச் சென்றடைகிறது.
Explanation:
what I can
Answer:
sorry I'm poor at Tamil language