குடி நீரில் (who) முறையில் நீரின் பண்புகளை எழுதுக
Answers
Answer:
inappropiate language!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Explanation:
குடி நீர் என்பது மனிதர்களால் உட்கொள்ளப்பட்டால் எவ்வகை பாதிப்பும் ஏற்படுத்தாத நீர் ஆகும். வளர்ந்த நாடுகளில் குடி நீர் குழாய் நீராக வீடுகளில் உணவு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டாலும், வணிகம் மற்றும் தொழில்துறையிலேயே குழாய் நீர் அதிகம் பயன்படுகின்றது. இவற்றிற்கு அளிக்கப்படும் நீர், தரக் கட்டுப்பாட்டுகளின் வரையறைகளை எட்டியிருக்கவேண்டும். கழிவறையினைச் சுத்தம் செய்யவோ, நீர்ப்பாசனத்துக்கோ குடி நீர் பயன்படுத்தப்பட்டாலும், தற்காலத்தில், சாம்பல் நீர் இவற்றிற்கு ஒரு மாற்றாக அமைந்துள்ளது.
உலகின் பெரும் பகுதிகளில், மனிதர்களுக்குப் போதுமான குடிநீர் கிடைப்பதில்லை. கிடைக்கும் நீர் நோய்க்காவிகளாலும் நோய்க்காரணிகளாலும் மாசுபட்டுள்ளது. பல நாடுகளில் இவ்வகை மாசுபட்ட நீரினை அருந்துவது உடல்நலக்கேட்டுக்கும், இறப்புக்கும் காரணமாக அமைகின்றது. வளர்ந்துவரும் நாடுகள் தூய குடிநீரினை மக்களுக்கு வழங்குவதையும், அதனால் பொது நலத்தினைக் காப்பதையும் குறிக்கோளாகக் கொண்டுள்ளன.
நீர் மனிதர்களின் வாழ்வுக்கும் பிற உயிரினங்களின் வாழ்வுக்கும் இன்றியமையாதது ஆகும்.[1] கொழுப்பைத் தவிர்த்து, நீர் நிறை மூலம், மனித உடலில் சுமார் 70% இருக்கின்றது. வளர்சிதைமாற்றத்திலும், கரைசல்களைக் கரைக்க கரைப்பானாகச் செயல்படுவதிலும் நீருக்குக் குறிக்கத்தக்க பங்கு உண்டு. ஐக்கிய அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம், ஒரு சராசரி அமெரிக்கர் ஒரு நாளில் 2.0 லிட்டர் நீரினை அருந்துவதாக முன்னர் அறிக்கையிட்டாலும்,[2] இப்போது வயதுக்கு ஏற்றார்போல் உட்கொள்ளும் அளவு மாறுபடுவதாகத் தெரிவிக்கின்றது.[3]
புட்டித் தண்ணீர் பல இடங்களில் குடிநீராக பொது நுகர்வுக்காக விற்கப்படுகிறது.