Write a essay on money saving in tamil.
Answers
Answer:
குழந்தைகளிடம் சிறு வயதில் இருந்தே உண்டியலில் பணம் சேர்க்கும் பழக்கத்தை பெற்றோர்கள் சொல்லி கொடுக்க வேண்டும்.
நம்முடைய தேவைகளை நாமே பார்த்து கொள்ளவதிற்கு பணம் சேமிக்க வேண்டும்.
Explanation:
சிறுகச் சேமித்தால்... பெருக வாழலாம்!
நம் அனைவருக்குமே எதிர்காலத்
தேவைக்காக சேமிக்க வேண்டும் என்ற ஆசையும் எண்ணமும் இருக்கும். ஆனால் அப்போதைய சூழல்கள் சேமிப்புக்கு ஏதுவாக இருப்பதில்லை. வரவுகளைத் தாண்டிய செலவுகள் அதிகமாக இருப்பதே அதற்குக் காரணம். திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கும், கல்விச் செலவுகளுக்கும் நம்மில் பலர் சேமிப்பதுண்டு. விபத்து போன்ற திடீர் செலவுகளுக்குக் கடனை நம்பியே இருக்க வேண்டியுள்ளது.எனவே மாதம் சிறு தொகையைச் சேமித்து வைத்தால் எதிர்காலத்தில் அது மிகப் பெரிய பயனாக இருக்கும். சேமிப்புக்கு பல்வேறு வழிகள் நம்மிடையே உள்ளன. சிலர் வீட்டிலேயே சிறு தொகையாகச் சேமித்து வைப்பார்கள். சிலர் தபால் நிலையங்களிலும், சிலர் வங்கிகளிலும் சேமிப்பதுண்டு.நகை, வீட்டு மனை, போன்ற முதலீடுகளும் சேமிப்புகள்தான். மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகளும் தலைசிறந்தவை. வங்கிகளில் சேமித்து வைப்பது பெரிய பயன் அளிக்காது. பணம் பாதுகாப்பாக இருந்தாலும் வட்டி போன்ற வரவுகள் வங்கிகளில் மிகவும் குறைவே. அதற்குப் பதிலாக மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களிலோ அல்லது நிஃப்டி போன்ற பங்குச் சந்தை முதலீடுகளிலோ கவனம் செலுத்தலாம்.bவங்கிகளின் நிலை சமீப காலமாகவே மிக மோசமான நிலையிலேயே உள்ளது. வங்கிகளில் மோசடிகள் அதிகரித்து வருவதும், வங்கிகள் இயங்க முடியாமல் தவிப்பதும் இயல்பாகிவிட்டது. வங்கிகளில் சேமிக்கப்படும் தொகைக்கான வரவும் மிகக் குறைவாகவே இருக்கிறது. எனவே மாற்று முதலீட்டு வழிகளில் கவனம் செலுத்துவது சிறந்தது.நிலம் வாங்கி வைப்பது என்ற எண்ணம் இருந்தால் கைவிட்டு விடலாம். கடந்து பத்து ஆண்டுகளாகவே நிலத்தின் விலை உயர்ந்த மாதிரி தெரியவில்லை. எனவே நிலத்தின் மீதான முதலீட்டைத் தவிர்க்கலாம் என்கிறார் பொருளாதார வல்லுநரான ஆனந்த் ஸ்ரீனிவாசன்.