write a kaituri about friend in tamil
Answers
Answer:
follow back pls...............
Answer:
நண்பர்கள் வாழ்வின் வழிகாட்டிகள்
சங்ககாலம் முதல் இந்த நவீன ஊடக காலம் வரை நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கும் ஒரு உன்னத உறவே நண்பர்கள். நல்ல நண்பர்கள் வாய்ப்பது ஒருவரின் வாழ்நாளில் பெரிய பாக்கியம் ஆகும். 5 வயதில் அறிமுகம் ஆகும் சில நண்பர்கள் ஆயுள் முழுக்க தொடர்ந்து வருவது நமக்கு கவுரவம் கூட. இன்றளவும் பலரின் வாழ்வில் மாற்றங்களைக் கொண்டுவருவதும், ஏமாற்றங்களை துரத்தி அவர்களுக்கு ஆறுதல் தருவதாகவும் இருப்பது நல்ல நண்பர்கள் மட்டுமே. மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் நண்பர்களை இணைப்பதில் தவறு ஏதும் இல்லை.'முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்துஅகநக நட்பதே நட்பு'என்கிறார் வள்ளுவர். இரண்டாயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அவர் சொன்ன வார்த்தைகள் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நட்பிற்கு இலக்கணம் சொல்லும். நண்பர்கள் என்பவர்கள் ஜாதி, மத, இன மொழி எல்லைகளைக் கடந்து நம்முடைய எண்ணங்களின் வலிமையால் நம்மோடு பயணிப்பவர்கள். நாம் செய்யும் எல்லாவற்றிற்கும் தலையாட்டும் பொம்மைகளாக இல்லாமல் நமது தவறுகளை தட்டிக் கேட்கும் தகப்பனாக மாறும் இயல்பை உடையவர்கள். பெற்றோர்களிடமும் மற்ற உறவுகளிடமும் கூற இயலாத பலவற்றையும் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள இயலும்.நண்பன் யார்?'உன் நண்பன் யார் என்று சொல்? நான் உன்னைப்பற்றி சொல்கிறேன்' என்பார்கள். நண்பர்கள் எப்படிப் பட்டவர்களாக இருக்கிறார்களோ அவர்களின் குணமே நம்மை வந்து சேரும். கற்பைப் போலவே நட்பும் புனிதம் என்ற வரிகள் இதற்காகவே எழுதப்பட்டு இருக்கலாம். பெரும்பாலும் நம்மை சுற்றி இருப்பவர்கள் எல்லோரையும் நாம் நண்பர்களாக ஏற்பதில்லை. சிலரை ஏற்கிறோம். சிலரை மட்டுமே உயிர் நண்பர்களாக மதிக்கிறோம். அவர்களிடமே நமது ரகசியங்களை பகிர்கிறோம்.
Explanation: