India Languages, asked by ashwinrajtmh2006, 2 months ago

"மழை இன்றி உயிர்கள் இல்லை" write a small essay on this topic​

Answers

Answered by mad210219
2

மழை நீர் நம்முடைய உயிர் நீர் !!

Explanation:

மழை நீரை சேமிப்போம் !! மனிதவளம் காப்போம் !!

குடிநீரும் அதன் அவசியமும் சொல்ல தேவையில்லை. தாவரங்கள் முதல் மனிதன் வரை உயிர்வாழ மிக அவசியமானதாகும். மனிதனின் உடலில் பிரதான சக்தி நீராக இருக்கின்றது. மழைத்துளியே ந

ம்மலுடைய உயிர் நீர் என்றே சொல்லலாம்

2025ல் ஆசியா ஆப்பிக்கா நாடுகளில் கடுமையான குடிநீர் பஞ்சம் உருவாகலாம் என்று கணக்கிடப்படுகின்றது. ஏன் நீருக்காக ஒரு நாட்டின் மேல் போர் தொடுக்கும் காலமும் வரலாம் என்று எச்சரிக்கை விடப்படுக்கின்றது. இருந்தாலும் மக்களிடம் எந்த விதமான விழிப்புணர்வும் வரவில்லை என்பதுதான் கவலைக்கிடமான ஒன்று. வளர்ந்துவரும் நாடுகள் கூட இதைப்பற்றி பெரிதுப்படுத்திக்கொண்டதாக தெரியவில்லை. வளர்ந்த நாடுகளோ நமக்கென்ன என்ற நிலையில் இருக்கின்றது.

மனிதன் குடிப்பதற்கும் குளிப்பதற்கும் தேவை நீர். நம் பூமியானது நான்கில் மூன்று பகுதி நீரால் சூழப்பட்டிருந்தாலும். மனிதனின் தேவைக்கு மழை நீரையும், நிலத்தடி நீரை பயன்ப்படுத்த வேண்டியுள்ளது. கடல் நீர் உப்புத்தன்மையும் கடினதன்மையும் உள்ளதால் நேரடியாக விவசாயத்திற்கோ இல்லை குடிநீராகவோ பயன்படுத்த முடியவில்லை. கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள் இருந்தும் நடைமுறைக்கு இன்னும் வரவில்லை. இதன் செலவினங்கள் அதிகம்.. ஒரு வேடிக்கையான விடயம் என்னவென்றால் காட்டாற்று தண்ணீரையும் நதிநீரையும் சேமிக்காமல் கடலில் கலக்க செய்துவிட்டு கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்களை தீட்டுகின்றார்கள். உபரியாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமித்து குடிநீராக்கும் திட்டங்களை கொண்டு வரலாமே!

இயற்கையான கழிவுகளை இயற்கையே சமன் செய்துவிடும். ஆனால் மனிதன் நாகரிக வளச்சிப்பாதையில் உண்டான தொழிற்ச்சாலை வேதியியல் கழிவுகள் நதியிலும் ஆற்று படுகைகளிலும் கலந்து விடப்பட்டன. இதனால் நதிநீரும் மாசுப்பட்டது அதனைச் சார்ந்து நிலத்தடிநீரும் உவர்ப்பானது. இதன் காரணமாக பல நோய்களும் வர ஆரம்பித்துவிட்டது. 65 சதவிகிதம் நோய்கள் நீரினால் பரவுகின்றது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

நாம் வரலாற்று பாடங்களில் படித்துள்ளோம், குளங்களை வெட்டினார் அணைகள் கட்டினார்கள் ஆனால் இன்று நடப்பது குளங்கள் தோரும் துண்டு போட்டு வீடுகள் கட்டினோம். தப்பி தவறி இருக்கும் குளங்கள் தூரு வார எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் இன்றைய நிலை.

மனித நாகரிக வளர்ச்சிதான் இந்த சீர்கேடுக்கு காரணம் என்று சொல்வதிற்கில்லை. நாகரிக வளர்ச்சியையும் நாம் ஏற்றுகொள்ளதான் வேண்டும். அதே வேலையில் தொலை நோக்குப்பார்வையில் சில நடவடிக்கைகளும் நாம் மேற்கொண்டால்தான் இந்த பூமியை நாளைய தலைமுறைக்கும் விட்டு செல்ல முடியும்.

நீர் இல்லா நிலையை இந்த பூமியில் நினைத்துக்கூட பார்க்க முடியாது. அதேபோல் நீர் இல்லாமல் உயிரின் ஒரு அணுவும் அசையாது என்பதும் உண்மையே.இப்படிப்பட்ட பனிப் பாலைவனங்களை மனிதன் வாழ்வதற்கு தவிர்க்கப்பட்டது. இயற்கை செய்த விளையாட்டில் சுமார் 17,000 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வெப்பஉயர்வு பூமி பந்தின் ஒரு திருப்பு முனையாக அமைந்து விட்டதாக அறிவியலர்கள் கூறுகின்றார்கள். அந்நாளில் ஏற்பட்ட வெப்ப உயர்வு உலகின் பருவநிலையில் ஒரு மாபெரும் மாற்றத்தை உருவாக்கிவிட்டது. இந்த நிகழ்வுதான் நாகரிகத்தின் ஆதாரமாக அமைந்துவிட்டது என்றால் மிகையாகாது.அந்த பருவநிலை மாற்றங்கள் உலகில் தொடர்ந்தது. அந்த மாற்றம்தான் உலகை மாற்றியமைக்க முதன்மையான காரணமாக அமைந்துவிட்டது. தெற்கிலும் வடக்கிலும் உள்ள பனிப்பாறைகள் வெப்ப உயர்வு காரணமாக உருக ஆரப்பித்தது. பனி உருகி நீராகியது. நீர் நதிகளாகி கடலில் கலந்தது. அதனால் கடல்மட்டம் உயர்ந்தது.

 

குடிநீர் எப்படி மாசுப்படுகின்றது? நிலத்தடிநீர் குறைய காரணம் என்ன? உலக வெப்ப மயமானதிற்கும் குடிநீருக்கும் தொடர்பு உண்டா? இதை தடுக்க நாம் செய்ய் வேண்டிய கடமை என்ன? என்பதை பற்றி நாம் வெறும் பேசிக்கொண்டு மட்டும் இருந்தால் போதாது மக்களாகிய நாமும் கொஞ்சம் இயற்கையே பேணி காப்பதில் அக்கறை கொள்வோம் .மழை நீரை சேமிப்போம்

Similar questions