India Languages, asked by lahsiv47291, 10 months ago

write a tamil katturai on gandhi adigal

Answers

Answered by rupalibhakat66
3

Answer:

சாதனை மனிதர்கள்

Mahatma Gandhi in Tamil – தேச தந்தை மகாத்மா காந்திஜியின் வாழ்க்கை வரலாறு

Mahatma Gandhi

Mahatma Gandhi in Tamil – இந்தியாவின் தேச தந்தை என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இந்திய விடுதலைக்கு ஆற்றிய பங்கு அளப்பரியது. இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் என்ன பேசப்பட வேண்டும் என்பதை இந்தியாவிலிருந்து தீர்மானித்தவர் மகாத்மா காந்தி. அவரின் வாழ்க்கை பற்றிய முழுமையான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்……

பிறப்பு மற்றும் இளமை பருவம்:

மகாத்மா காந்தி குஜராத் மாநிலத்திலுள்ள “போர்பந்தர்” என்ற இடத்தில் 1869-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ஆம் நாள் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் கரம்சந்த் தயார் புத்திலி பாய். காந்திஜியின் தந்தை போர்பந்தரில் திவானாக பணியாற்றி வந்தார். இவருடைய தாய் மொழி குஜராத்தி.

பள்ளியில் படிக்கும் போதே நேர்மையான மாணவனாக விளங்கிய காந்தி தன் 13-ஆவது வயதில் கஸ்துரி பாய் என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். தன் 18-வயதில் உயர்கல்வி பயில இங்கிலாந்து சென்ற காந்தி பாரிஸ்டர் எனப்படும் வழக்கறிஞர் படிப்பை தேர்ந்தெடுத்து படித்தார். படிப்பை முடித்து இந்திய திரும்பிய காந்தி அப்போதைய பம்பாயில் (மும்பை) வழக்கறிஞராக பணியாற்றினார்.

தென்னாபிரிக்க பயணம் ஏற்படுத்திய மன மாற்றம்:

பம்பாயில் பணியாற்றி வந்த காந்திக்கு 1893-ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் பணி புரிய ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதனையேற்று தென் ஆப்ரிக்கா சென்ற காந்தி அங்கு சந்தித்த நிகழ்வுகள் அவரின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த நிகழ்வுகள் தான் பின்னாளில் அவர் ஒரு மாபெரும் சுதந்திர போராட்ட வீரராக காரணமாக அமைந்தது.

தென் ஆப்ரிக்காவில் அவர் வழக்கறிஞராக பணியாற்றி வந்த போது கறுப்பினர்கள் மற்றும் இந்தியர்கள் நீதி மன்றத்தில் வாதாடும் பொது தலைப்பாகை அணிந்துகொண்டு வாதாட கூடாது என்று தடை விதிக்கபட்டது. தென் ஆப்ரிக்க ரயில்களில் வெள்ளையர்களை தவிர யாரும் முதல் வகுப்பில் பயணம் செய்ய கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. இவையெல்லாம் அவர் மனதில் விடுதலை உணர்வை தட்டி எழுப்பியது. மனிதனை மனிதன் அடிமைப்படுத்துவதா என கொதித்தெழுந்தார்.

Similar questions