write about bharathiyar in tamil.
Answers
Vanakam Nanba !
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி ( டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பாெருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.
பாரதி, இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை, மகான் அரவிந்தர் முதலியோர் இவரின் சமகாலத்தைய மனிதர்கள் ஆவர். இவர் விவேகானந்தரின் மாணவியான சகோதரி நிவேதிதையை தமது குருவாகக் கருதினார்.
Hope It Helps u :)
Answer:
சின்னசாமி சுப்பிரமணிய பாரதி பாரதியர் என்றும் அழைக்கப்படுகிறார் (11 டிசம்பர் 1882 - 11 செப்டம்பர் 1921), ஒரு தமிழ் எழுத்தாளர், கவிஞர், பத்திரிகையாளர், இந்திய சுதந்திர ஆர்வலர், ஒரு சமூக சீர்திருத்தவாதி மற்றும் பலதரப்பட்டவர். "மகாகவி பாரதி" ("சிறந்த கவிஞர் பாரதி") என்று பிரபலமாக அறியப்பட்ட இவர் நவீன தமிழ் கவிதைகளின் முன்னோடியாக இருந்தார், மேலும் இது எல்லா காலத்திலும் மிகச்சிறந்த தமிழ் இலக்கிய பிரமுகர்களில் ஒருவராக கருதப்படுகிறது. இவரது ஏராளமான படைப்புகளில் இந்திய சுதந்திர இயக்கத்தின் போது தேசபக்தியைத் தூண்டும் உமிழும் பாடல்கள் அடங்கும்
Explanation:
bro im also from Tamil Nadu