India Languages, asked by loverboy0001, 3 months ago

Write About தமிழர் பண்பாடு ⁉️


Only Who Knows Tamil Answer ....


✖Spammers Will Be Reported✖ ​

Answers

Answered by ithinavanacinom
5

Answer:

I know Bro

Explanation:

தமிழ் கலாச்சாரம், தமிழ் மக்களின் பண்பாடு ஆகும். தமிழ் கலாச்சாரம் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்க்கை வழிகளில் வேரூன்றி உள்ளது. தமிழ் கலாச்சாரம் மொழி, இலக்கியம், இசை, நடனம், நாட்டுப்புற கலை, தற்காப்பு கலை, ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை, விளையாட்டு, ஊடகங்கள், நகைச்சுவை, உணவு, ஆடைகள், கொண்டாட்டங்கள், தத்துவம், மதங்கள், மரபுகள், சடங்குகள், நிறுவனங்கள், அறிவியலை வெளிப்படுத்தப்படுகிறது மற்றும் தொழில்நுட்பம். தமிழர் பண்பாடு தமிழ் மொழியின் ஊடாகவும், தமிழர் தாயகப் பிணைப்பின் ஊடாகவும், தமிழர் மரபுகள், வரலாறு, விழுமியங்கள், கலைகள் ஊடாகவும், சமூக, பொருளாதார, அரசியல் தளங்கள் ஊடாகவும் பேணப்படும் தனித்துவ பண்பாட்டுக் கூறுகளைக் குறிக்கும்.

தமிழர் பண்பாடு பல காலமாக பேணப்பட்ட, திருத்தப்பட்ட, மேம்படுத்தப்பட்ட அம்சங்களைக் குறித்து நின்றாலும், அது தொடர் மாற்றத்துக்கு உட்பட்டு நிற்கும் ஒரு இயங்கியல் பண்பாடே.

"தமிழர் பண்பாட்டின் அமைப்பொழுங்கானது அடிப்படையில் இரண்டு அம்சங்களைக் கொண்டதாகும். ஒன்று, அதனளவில் சார்புடையது (culture dependent). மற்றறொன்று, உலகளாவிய அமைப்பியல்புகளோடு பொருந்தக்கூடியது (culture independent). அதாவது, தமிழ்ப் பண்பாட்டின் உருவகத்தைத் தரக்கூடிய 'புறக் கூறுகள்' பண்பாடு சார்ந்தும், அவற்றின் 'அகக் கூறுகள்' உலகளாவிய அமைப்புகளோடு ஒத்திசைவு பெறுவதும் இதன் உட்பொருளாகும்." [1]

பாவாணர் கூறுவது போல, பண்பாடு என்பது திருந்திய ஒழுக்கம், நாகரிகம் என்பது திருந்திய வாழ்க்கை. முன்னது 'அகக்கூறு ' பின்னது 'புறக்கூறு'. நாகரிகம் சேர்ந்த பண்பாடுண்டு , நாகரிகம் இல்லாத பண்பாடுமுண்டு . தமிழர் பண்பாடு இவ்விரண்டிலும் மெச்சத்தக்கது.

பல சந்தர்ப்பங்களில் தமிழர் பண்பாடு இது, தமிழர் பண்பாடு இதுவல்ல என்று தெளிவாக வரையறுப்பது கடினமாகினும் ஒரு அறிவுசார் மதிப்பீடு செய்ய முடியும். எடுத்துக்காட்டாக யூத சமயமோ, சீக்கிய சமயமோ தமிழர் பண்பாட்டு வட்டத்துக்குள் வரமாட்டா. மாறாகச் சைவ சமயத்துக்குத் தமிழர் பண்பாட்டுடன் ஒரு இறுகிய தொடர்பு உண்டு.

Answered by Viveka57
3

Explanation:

பண்பாடு :-

பண்பாடு, கலாச்சாரம் அல்லது கலாசாரம் (culture) என்பது பொதுவாக மனித செயற்பாட்டுக் கோலங்களையும்; அத்தகைய செயற்பாடுகளுக்குச் சிறப்புத் தன்மைகளையும், முக்கியத்துவத்தையும் கொடுக்கும் குறியீட்டு அமைப்புக்களையும் குறிக்கின்றது.

! உங்கள் விலைமதிப்பற்ற Points ku நன்றி !

Similar questions