Write about Thanjai periya Kovil
Answers
Answered by
6
தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் என்றும், தஞ்சைப் பெரிய கோயில் ("Big temple") அல்லது தஞ்சைப் பெருவுடையார் கோயில் ("Peruvudayar Temple") என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள புது ஆற்று கரையில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும்[1] , தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியக் கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. கிபி 11-ஆம் நூற்றாண்டில் முதலாம் இராஜராஜ சோழன் இக்கோயிலைக் கட்டுவித்தார்.[2]. 1003-1004 ஆம் ஆண்டு தொடங்கி 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010 ஆவது ஆண்டோடு 1000 ஆண்டுகள் நிறைவடைந்தன.
Answered by
0
Similar questions