write about tiruvanthapuram in tamil.
Answers
திருவனந்தபுரம் இந்தியாவிலுள்ள கேரள மாநிலத்தின் தலைநகராகும். இந்நகரானது திருவனந்தபுரம் என்றழைக்கப்படும் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்நகரம் மகாத்மா காந்தியால் இந்தியாவின் பசுமை நகரம் என அழைக்கப்பெற்றது. கேரளாவின் பெரிய நகரமும் அதிக நகரம் கொண்ட நகரமும் இதுவே. இந்திய நடுவணரசின் ஆய்வுக்கழகங்களும் கேரள மாநில அரசின் அலுவலங்களும் இங்கே உள்ளன. இந்நகரம் கேரளாவின் சிறந்த நகரமாக அறியப்படுகிறது.
தமிழ் சொற்களான திரு, அனந்த,புரம் ஆகிய பதங்களின் இணைப்பே திருவனந்தபுரமாகும். அனந்தன் என்ற பாம்பின் மீதே திருமால்(அரங்கநாதர்) படுத்திருப்பார். இப்பெயர் இவ்வூரிலுள்ள புகழ்பெற்ற அரங்கநாதர் திருக்கோயிலால் இப்பெயர் வந்தது.
திரு பத்மநாபசாமி கோயில் கோபுரம்
வரலாறு
கி.பி. 1745 முதல் 1949 வரை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக இருந்து வந்தது. 1949-க்குப் பிறகு இது திரு-கொச்சியின் தலைநகராக இருந்தது. நவம்பர் 1, 1956-ல் கேரள மாநிலம் உருவான போது அதன் தலைநகராகத் தேர்வு செய்யப்பட்டது.
விளையாட்டுக்கள்
மட்டைப் பந்தாட்டம் மற்றும் கால் பந்தாட்டங்கள் இந்நகரில் பிரபலமானவை. முக்கியமான மட்டைப் பந்தாட்ட மைதானங்கள் இங்கு உள்ளன. கைப்பந்து, கூடைப்பந்து ஆகிய விளையாட்டுகள் பள்ளிகளில் கற்றுத் தரப்படுகின்றன. கோல்ப் விளையாட்டும் சிலரால் விளையாடப்படுகிறது.
ஊடகம்
பெரும்பாலான நாளிதழ்கள் மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் பதிப்பிக்கப்படுகின்றன. பெரும்பாலான மலையாள தொலைக்காட்சிகள் இந்நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்குகின்றன. திரையரங்குகளில் மலையாளம், ஆங்கிலம், தமிழ், இந்தி ஆகிய மொழிப் படங்கள் திரையிடப்படுகின்றன. இந்தியாவின் முன்னணி தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்கள் இங்கும் தங்கள் சேவையை வழங்குகின்றன.