India Languages, asked by priya516054, 9 months ago

Write some quotes about Vivasayam vithaikapada vendum in tamil ​

Answers

Answered by bella112
1

Explanation:

பெண் :

செக்கச்செவந்த பையன்

செங்கதிர வீசிபுட்டான்

கன்னங் கருத்த மச்சான் கழனி

பாக்க போவலயோ போவலயோ...

ஆண்:

என்ன புள்ள கேட்டுப்புட்ட

இந்த கொடும எங்க சொல்ல

பசியெடுத்த புள்ளையாட்டம்

பயிரெல்லாம் வாட்டங் காட்ட

பச்ச தண்ணீகூட பக்குவமாக

எறங்கலயே என்னன்னு

நானுஞ் சொல்ல

பெண்:

கூறுகெட்ட மச்சானே

கூனிகுருகி நிக்காதே

வெயிலுபட்ட முத்தெல்லாம்

வேர்வையாக புதைச்சிருக்கோம்

பச்சபுல்லுக்குள்ள களையுந்தான் முளைக்காதோ

மேடு பள்ளத்துல ஆறும்தான் ஓடாதோ...

ஆண்:

வெவரந்தெரிஞ்ச சிறுக்கி

வியாக்கியானம் நல்லாருக்கு

வானராசா பொய்த்துபோக

வட்டிக்காரன் வந்துநிக்க

மானரோசம் நாண்டுசாவ

மாடெல்லாம் புடுச்சுபோன

என்ன செய்வோனே புள்ள நா

எங்க சொல்வேனோ ஏபுள்ள.

பெண்:

கலங்காதே அத்தானே ஓ...

கம்பீரம் குறைக்காதே ஏராசாவே

தரைக்குள்ள விதச்ச விதை

தலைநிமிந்து முளைக்கலயா

தலைநிமிந்து முளைக்கலயா

உழைப்பெல்லாம் வீணாகுமா

உயிரெல்லாம் உரம்போட்டோமே

நம்ம பசிவயித்த ஈரங்கட்டி

மக்கட்பய வயிறு ரெம்ப

போவோமே மச்சான் போவோமே

ஆண்:

எந்த சாமி தீர்க்க போவுதோ

எங்கொறய கேட்கப் போவுதோ

யாருபார்ப்பா எம்பயிர

என்னவிட்டா யாரிருக்க அதுக்கு

வாடிபுள்ள போவோமே போவோமே

Similar questions