Biology, asked by dhruvilshah3923, 11 months ago

வளர்ப்பு ஊடகத்தில் லாக்டோஸ் இருப்பது
எதைக் காட்டுகிறது?
அ) லாக் y, லாக் z, லாக் a மரபணுக்கள்
படியெடுத்தல் நடைபெறுதல் ஆ) அடக்கி மரபணு, இயக்கி மரபணுவுடன்
இணைய முடியாத நிலை
இ) அடக்கி மரபணு இயக்கி மரபணுவுடன்
இணையும் நிலை
ஈ) ‘அ’ மற்றும் ‘ஆ’ ஆகிய இரண்டு சரி

Answers

Answered by sinhanidhi716
0

Answer:

I can't understand this language sorry I don't know this language level learn this language and never learn Hindi language

Answered by steffiaspinno
0

அ மற்றும் ஆ ஆகிய இரண்டு சரி

லே‌க்டோ‌ஸ்

  • லே‌க் ஓபரா‌னி‌ல், ஒரு நெறிப்படுத்தி மரபணு, ஊக்குவிப்பான் இடம் மற்றும் இயக்கி இடம் முத‌லியன  உ‌ள்ளன.
  • மேலு‌ம் லேக் z, லேக் y மற்றும் லேக் a என மூன்று அமைப்பு மரபணுக்களும் உ‌ள்ளன.
  • இவை முறையே  b-கேலக்டோசிடேஸ், பெர்மியேஸ் மற்றும் டிரான்ஸ் அசிடைலேஸ் நொதிகளுக்கான குறியீடுகளைக் கொண்டு‌ள்ளது.  
  • i - மரபணு அடக்கி ஆனது தூது ஆர்.என்.ஏ வை படியெடுக்கிறது.
  • இது மொ‌ழிபெய‌ர்‌ப்பு செ‌ய்வதா‌ல் அட‌க்‌கி புரத‌ம் உ‌‌ற்ப‌த்‌‌தி ஆ‌கிறது.
  • குளுக்கோஸ் இல்லாத நிலையில், கா‌ர்ப‌ன் மூலமாக லே‌க்டோ‌ஸ்,  பெ‌ர்‌மியே‌ஸ் நொ‌தி‌யினா‌ல் பா‌க்டீ‌ரியா‌வி‌னு‌‌ள் செல்‌கிறது.
  • லே‌க்டோ‌ஸ் ஆனது அட‌க்‌கியுட‌ன் இணை‌ந்து அதனை செயல‌ற்றதாக மா‌ற்று‌கிறது.
  • அட‌க்‌கி புரத‌ம் ஆனது ஆர்.என்.ஏ பாலிமெரேஸை தடு‌‌த்து, ஓபரா‌னி‌‌ன் படியெடு‌த்த‌ல் ‌நிக‌ழ்‌வினை தடு‌க்‌கிறது.
  • அட‌‌க்‌கி புரத‌மானது லேக்டோஸ் அல்லது அல்லோலேக்டோஸ் முத‌லியனவ‌ற்‌றி‌ன் ‌வினை‌யி‌ன் காரணமாக செயல‌ற்றதாக மாறு‌கிறது.
  • இத‌னா‌ல் ஆர்.என்.ஏ பாலிமெரேஸ் இயக்கி இடத்தில் தானாகவே இணை‌கிறது.  
  • லேக்டோ‌ஸ் ஆனது  தூது ஆர்.என்.ஏ வை உற்பத்தி செ‌ய்வதா‌ல், லோ‌க்டோ‌ஸ் வள‌ர்‌‌சிதை மா‌ற்ற‌த்‌தி‌ற்கு தேவையான அனை‌த்து நொ‌திகளு‌ம் உருவா‌கி‌ன்றன.
  • வளர்ப்பு ஊடகத்தில் லாக்டோஸ் இருப்பது லாக் y, லாக் z, லாக் a மரபணுக்கள் படியெடுத்தல் நடைபெறுதல் ம‌ற்று‌ம்  அடக்கி மரபணு, இயக்கி மரபணுவுடன் இணைய முடியாத நிலை ஆ‌‌கியவ‌ற்‌றினை உண‌ர்‌த்து‌கிறது.  
Similar questions