India Languages, asked by TransitionState, 1 year ago

yarkai essay in tamil.

Answers

Answered by sidharth5918
0

Answer:

1982 ஆம் ஆண்டில் கலுங்குங் எரிமலை வெடிப்பின்போது மின்னல் தாக்கும் காட்சி. ஒரு இயற்கை நிகழ்வு.

ஓப்டூன் அருவி, ஆத்திரேலியா. சுற்றுலாப் பயணிகளைப் போதிய அளவுக்கு அனுமதிக்கும் அதே வேளையில், நீர்வீழ்ச்சியின் இயற்கை இயல்புகளைப் பாதுகாப்பதிலும் இங்கு கவனம் செலுத்தப்படுகின்றது.

நதிக்கரை சூரியன் மறைவுக் காட்சி, இடம் மட்டக்களப்பு, கும்புறுமூலை

இயற்கை (இந்த ஒலிக்கோப்பு பற்றி ஒலிப்பு) (nature) என்பது இயல்பாக இருக்கும் தோற்றப்பாடு என்னும் பொருள் கொண்டது. இயல்பாகத் தோன்றி மறையும் பொருட்கள், அவற்றின் இயக்கம், அவை இயங்கும் இடம், இயங்கும் காலம் ஆகியவை அனைத்தையும் இணைத்து இயற்கை என்கின்றோம். உயிரினம், உயிரின அறிவு போன்றவையும் இயற்கையில் அடங்கும். பொதுவாக இயற்கையை ஆய்வு செய்வதென்பது அறிவியலின் மிகப்பெரிய ஒரு பகுதியாகும். மனிதர்களும் இயற்கையின் ஒரு பகுதியே ஆவர். மற்ற இயற்கை நிகழ்வுகளிலிருந்து மனிதனின் நடத்தைகள் முற்றிலும் வேறுபட்ட தனியான ஒரு பிரிவு என்று பெரும்பாலும் கருதப்படுகிறது. இயற்கை என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் நேச்சர் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. நேட்சுரா என்ற இலத்தீன் சொல்லின் அடிப்படையில் தருவிக்கப்பட்டதுதான் நேச்சர் என்ற ஆங்கில சொல்லாகும். இதன் பொருள் அவசிய குணங்கள், பிறவிக்குணம் என்பதாக அறியப்படுகிறது. பண்டைய இலக்கியங்களில் பிறவி அல்லது பிறப்பு என்று இதற்கு பொருள் கொள்ளப்பட்டிருந்தது[1].

கிரேக்க சொல்லான பிசிசு என்பதின் இலத்தீன் மொழிபெயர்ப்பே நேச்சுரா என்பதாகும். தாவரங்கள், விலங்குகள், மற்றும் உலகிலுள்ள பிற உயிரினங்கள் அனைத்தும் தங்கள் சொந்த விருப்பத்தில் உருவாக்கிக் கொள்ளும் உள்ளார்ந்த பண்புகளுடன் இச்சொல் தொடர்புடையதாகும் [2][3].

ஒட்டுமொத்தமாய் இயற்கை என்பது அண்டத்தின் இயற்பியல் என்று கருதப்படுகிறது. அண்டத்தின் இயற்பியல் என்ற சொல் பல்வேறு வகைகளில் விரிவான பொருள்களைக் கொண்டது ஆகும். இவையாவும் படிப்படியாக வளர்ந்து நன்மதிப்பையும் நம்பகத்தன்மையையும் பெற்று அழியாமல் நிலைத்திருக்கின்றன. கடந்த பல நூற்றாண்டுகளில் நவீன அறிவியல் முறைகளிலும் அண்டத்தின் இயற்பியல் என்ற பொருளின் பயன்பாடு அதிகரித்தவண்னம் உள்ளது [4][5].

நேச்சர் என்ற சொல்லின் பல்வேறு பயன்பாடுகளுக்கு மத்தியில் இச்சொல்லின் பொருள் பெரும்பாலும் நிலவியல் மற்றும் வனவியல் என்ற பொருள்களையும் குறிப்பதாக உள்ளது. தாவரங்கள் மற்றும் விலங்குகள் வாழும் பொது உலகத்தை இயற்கை என்ற சொல் குறிப்பதாகவும் கருதலாம். மற்றும் சில சந்தர்ப்பங்களில் உயிரற்ற பொருட்களுடன் தொடர்புடைய செயல்முறைகளுக்கு, அதாவது புவியின் வெப்பநிலை மற்றும் நிலவியல் போன்றவற்றுக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட வகை பொருட்கள் எவ்வாறு நிலைபெறுகின்றன மற்றும் அச்செயல்முறைகளுக்கேற்ப எவ்வாறு அவை தம்மை மாற்றிக் கொள்கின்றன என்பது தொடர்பான கருத்துகளையும் உள்ளடக்கியதாக இயற்கை பொருள் கொள்ளப்படுகிறது.

இது பெரும்பாலும் "இயற்கைச் சூழல்" அல்லது வனாந்தர-காட்டு விலங்குகள், பாறைகள், காடு என்ற பொருளைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. பொதுவாக மனித இடையீட்டினால் மிகுதியாக மாற்றியமைக்கப்படாத பகுதி என்றும், அல்லது அந்தப்பகுதிகளில் மனித தலையீடு நிகழாத பகுதியாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. . உதாரணமாக, உற்பத்தி பொருள்களும் மனித தொடர்புகளும் பொதுவாக இயற்கையின் பகுதியாக கருதப்படுவதில்லை. இயற்கை இயற்பியல் உலகின் தோற்றப்பாடுகளையும், உயிர்வாழ் இனங்களையும் குறிக்கிறது. இயற்கை மற்றும் செயற்கை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் பண்டைய காலம் முதல் இன்றுவரை இயற்கை புரிந்து கொள்ளப்பட்டு வந்துள்ளது. இது, அணுவிலும் சிறிய துகள்கள் சார்ந்தனவாகவோ அல்லது நாள்மீன்பேரடைகளைப் போல் மிகப் பெரிய அளவு சார்ந்தனவாகவோ இருக்கலாம்.

Answered by indianlanguagehelper
0

Answer:

                                     இயற்கை பற்றிய கட்டுரை

நாம் மிகவும் அழகான கிரகத்தில் வாழ்கிறோம், இது மிகவும் சுத்தமான மற்றும் கவர்ச்சியான இயற்கையை நிறைந்த பசுமை கொண்டது. இயற்கை எங்கள் சிறந்த நண்பர், இது நாம் இங்கு வாழ அனைத்து வளங்களையும் வழங்குகிறது. இது குடிக்க நீர், சுவாசிக்க தூய்மையான காற்று, சாப்பிட உணவு, தங்குவதற்கு நிலம், விலங்குகள், நமது பிற பயன்பாடுகளுக்கான தாவரங்கள் போன்றவற்றை நமக்கு அளிக்கிறது. இயற்கையின் சுற்றுச்சூழல் சமநிலையை பாதிக்காமல் நாம் அதை முழுமையாக அனுபவிக்க வேண்டும். நம் இயல்பை நாம் கவனித்துக்கொள்ள வேண்டும், அதை அமைதியாக மாற்ற வேண்டும், அதை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், அழிவிலிருந்து தடுக்க வேண்டும், இதனால் நம் இயற்கையை என்றென்றும் அனுபவிக்க முடியும். இயற்கையானது அனுபவிக்க கடவுள் நமக்கு அளித்த மிக அருமையான பரிசு.

இயற்கையின் அசல் தன்மையை நாம் அழிக்கக்கூடாது, சுற்றுச்சூழல் சுழற்சியை ஏற்றத்தாழ்வு செய்யக்கூடாது. நம் இயல்பாக வாழ்வதற்கும் அனுபவிப்பதற்கும் அழகான சூழலை நமக்கு வழங்குகிறது, எனவே அதை எல்லா சேதங்களிலிருந்தும் சுத்தமாகவும் விலகி வைத்திருப்பது நமது பொறுப்பு. நவீன சகாப்தத்தில், மனிதனின் பல சுயநல மற்றும் மோசமான நடவடிக்கைகள் இயற்கையை பெருமளவில் தொந்தரவு செய்துள்ளன. ஆனால் நாம் அனைவரும் நம் இயற்கையின் அழகை பராமரிக்க முயற்சிக்க வேண்டும்.

Similar questions