India Languages, asked by Hngjng4879, 11 months ago

கவிஞர் தமிழை ஏன் தேனுடன் ஒப்பிடுகிறார்

Answers

Answered by shivaniskitchen111
23

Answer:

தமிழைப் போற்றிப் புகழாத கவிஞர்களே இல்லை எனலாம். நம் கவிஞர் எங்கள் தமிழ்’ என்னும் கவிதையில் நம் தமிழ் மொழியானது அன்பையும் அறத்தையும் தூண்டக்கூடியது.

தேன் பல ஆண்டுகள் கெடாமல் இருப்பதை போலத் தமிழும் என்றும் கெடாமல் பாதுகாப்புடன் திகழ்கிறது.

தேன்சாப்பிடச் சாப்பிட உடல் வளம் பெருகும். தமிழ் கற்க கற்க உள்ளம் வளம் பெருகும். அதனால் கவிஞர் தமிழைத் தேனுடன் ஒப்பிடுகிறார்.

Explanation:

I hope it helps you !!

Answered by logaprabhasl
0

Answer:

நம் தமிழ் மொழி அனைவரிடத்தும் அன்பையும் அறத்தையும் தூண்டும். அஃது அச்சத்தைப் போக்கி இன்பத்தைத் தரும்.

எங்கள் தமிழ்மொழி தேன் போன்ற மொழியாகும்.தமிழைப் போற்றிப் புகழாத கவிஞர்களே இல்லை எனலாம். நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார், 'எங்கள் தமிழ்' என்னும் கவிதையில் நம் தமிழ் மொழியானது அன்பையும் அறத்தையும் தூண்டக்கூடியது.

தேன் பல ஆண்டுகள் கெடாமல் இருப்பதை போலத் தமிழும் என்றும் கெடாமல் பாதுகாப்புடன் திகழ்கிறது.

தேன்சாப்பிடச் சாப்பிட உடல் வளம் பெருகும். தமிழ் கற்க கற்க உள்ளம் வளம் பெருகும். அதனால் கவிஞர் தமிழைத் தேனுடன் ஒப்பிடுகிறார்.

Explanation:

எங்கள் தமிழ்

அருள்நெறி அறிவைத் தரலாகும்

அதுவே தமிழன் குரலாகும்

பொருள்பெற யாரையும் புகழாது

போற்றா தாரையும் இகழாது

கொல்லா விரதம் குறியாகக்

கொள்கை பொய்யா நெறியாக

எல்லா மனிதரும் இன்புறவே

என்றும் இசைந்திடும் அன்பறமே!

அன்பும் அறமும் ஊக்கிவிடும்

அச்சம் என்பதைப் போக்கிவிடும்

இன்பம் பொழிகிற வானொலியாம்

எங்கள் தமிழெனும் தேன்மொழியாம்!

- நாமக்கல் கவிஞர்

#SPJ2

Similar questions