India Languages, asked by thaneesh6133, 1 year ago


தமிழின் தனித்தன்மைகள் யாவை?​

Answers

Answered by asaravanan751
84

Answer:

பிறமொழி சொற்களின் கலப்படமின்றி மரபுசார் இலக்கண நெறிகளுக்கு இறுக்கமாக ஒழுங்கி எழுதப்படும் பேசப்படும் தமிழ் மொழியைதனித்தமிழ் எனலாம். தனித்தமிழ் தமிழில் மிகுதியாகிவரும் ஆங்கில சொற்களையும், நீண்டகாலமாக கலந்துநிற்கும் வடமொழிச்சொற்களையையும் தவிர்த்து எழுதுவதை இலக்காக கொண்டது. தமிழ் வேர்ச் சொற்களில் இருந்து ஆக்கப்படும் சொற்களே தமிழ்மொழிக்கு வளம் சேர்க்கும் என்ற கருத்துடையது. இது ஒரு கருத்தியல் இலக்கே. தமிங்கிலம், மணிப்பிரவாளம் போன்றவற்றின் எதிர்நிலை எனலாம். இது அவற்றின் ஆதிக்கத்தால் தோன்றிய எதிர்நிலை எனலாம்.மெய்யெழுத்துகளில் ஒன்றான ழகரம்தரும் ஒலி தமிழிலும்மலையாளத்திலும்மாண்டரீன், சீனம் உட்பட்ட சில மங்கோலிய மொழிகளிலும் மட்டுமே காணப்படுகிறது

தமிழ் சொல் வளம் நிறைந்த மொழி. நவீனத் தமிழ்மொழி பழந்தமிழ் மொழியில் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான சொற்களை இன்னும் பயன்படுத்துகின்றது. இதனால் சற்று பயிற்சியுடன் பழந்தமிழ் இலக்கியங்களை ஒரு தமிழர் படித்து அறிய முடியும். திருக்குறள் போன்ற சிறந்த பழந்தமிழ் படைப்புகள் தமிழர்களால் சிறப்பாக கற்கப்படுவதற்கு இத்தொடர்ச்சியான சொற்பயன்பாடு உதவுகின்றது.

சமஸ்கிருத சொற்கள் தொல்காப்பியர் காலம் முதலே தமிழ் மொழியில் உள்வாங்கப்பட்டு தகுந்த பல தளங்களில் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.

சமயம் சார்பான சமஸ்கிருத சொற்பயன்பாடுகள் தமிழில் அதிகம் காணப்படுகின்றன. சமஸ்கிருத உச்சரிப்புக்களைத் தமிழில் உள்வாங்குவதற்கு

கிரந்த எழுத்துக்கள் பயன்படுகின்றன.

தமிழின் நீண்ட வரலாற்றில் பல பிறமொழிச்சொற்கள் தமிழில் கலந்து, தமிழ்ப்படுத்தப்பட்டு தமிழை வளமாக்கியுள்ளன.

பாரசிக, அரபு போன்ற செம்மொழிகளில் இருந்தும், பிற திராவிட மொழிகளில் இருந்தும், போர்த்துகீசிய, டச்சு, பிரேஞ்சு போன்ற காலனித்துவ மொழிகளில் இருந்தும், இந்தி, சிங்களம், மலாய் போன்ற தமிழருடன் தொடர்புடைய பிற இனங்களின் மொழிகளில் இருந்தும், ஆங்கில மொழியில் இருந்தும் தமிழ் மொழிக்கு பல சொற்கள் வந்தடைந்துள்ளன.

பிறமொழிச் சொற்கள் மட்டுப்படுத்தப்பட்டு இருப்பது தமிழ் மொழியின் தொடர்ச்சிக்கும் தனித்துவத்திற்கும் அவசியம். ஆகையால் பிற மொழிச்சொற்களுக்கு இணையான தமிழ் மொழியின் அடிச்சொற்களில் இருந்து உருவாக்கப்படும் சொற்களை பயன்படுத்துவதே நன்று என்பது பல எளிய தமிழ் ஆதரவாளர்களின் கருத்து. இக்காலத்தில் குறிப்பாக ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் அடிச்சொற்களில் இருந்து உருவாக்கப்பட்ட சொற்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது பல தமிழ் ஆர்வலர்களின் வேண்டுகோளாக அமைகின்றது.

Hope it helps you

Please mark me as brainlist

Answered by shreesakthi
32

Answer:

  • புதிய தலைமுறையில் தமிழின் பெருமை பற்றியும், தமிழனின் அருமை பற்றியும் பறைசாற்ற ஒரு நிகழ்ச்சி செய்யலாம் என்று இருக்கிறேன். அதற்கான ஆராய்ச்சி பணிகளில் இறங்கி இருக்கிறேன்.

  • இப்போது பிற மொழிகளில் இல்லாத தமிழ் மொழியின் தனிச் சிறப்புகள் என்ன என்பதைப் பற்றிய தகவல்களை சேகரித்து வருகிறேன்.
  • (உதாரணத்துக்கு காற்றை மையமாக வைத்தே உச்சரிக்கப் படுவதால் உயிர் எழுத்துகளுக்கு உயிரெழுத்து என்று பெயர். ஏனென்றால் உயிர் வாழ்வதற்கு அடிப்படை காற்றல்லவா ? )
  • இந்த நிலையில் குழுமத்துச் சான்றோர் தமிழின் தனிச்சிறப்பு/தனித்தன்மை பற்றி சில தகவல்களை தர முடியுமா ?

  • சொன்னால் ஆராய்ச்சிக்கு மிக்க பயனுள்ளதாய் இருக்கும்.

  • யாரிடமேனும் நூல்கள் இருந்தால் சொல்லுங்கள். நான் வந்து வாங்கிக் கொள்கிறேன்.

Explanation:

நன்றி

Similar questions