India Languages, asked by harsha568, 1 year ago

செயப்படுபொருளைமுதன்மைப்படுத்தும்வினை
அ) பிறவினைஆ) காரணவினை
இ) செய்வினை) செயப்பாட்டுவினை​

Answers

Answered by chhavisingh76
0

In which language u have written..?

Answered by Anonymous
3

Answer:

ஆசிரியர் பயிற்சி மாணவர்களே! இப்பகுதியில் செய்வினை, செயப்பாட்டு வினை ஆகிய தொடர்களைப் பற்றி அறியவிருக்கிறீர்கள்!

கண்மணி பாடத்தைப் படித்தாள்

(எழுவாய்) (செயப்படுபொருள்) (பயனிலை)

இது செய்வினைத் தொடர் - Active Voice. செய்வினைத் தொடரில், எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்ற வரிசையில் வாக்கியம் அமைந்து இருக்கும். செயப்படுபொருளில் ‘ஐ’ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்தும் நிற்கும், வெளிப்பட்டும் வரும்.

செய்வினைத் தொடரைச் செயப்பாட்டு வினைத் தொடராக்கும் விதிகள்:

(அ) எழுவாயைச் செயப்படுபொருள் ஆக்க வேண்டும். அதனுடன் மூன்றாம் வேற்றுமை உருபாகிய ‘ஆல்’ என்பதைச் சேர்க்க வேண்டும்.

கண்மணி + ஆல் = கண்மணியால்

(ஆ) செயப்படுபொருளில் உள்ள, ‘ஐ’ வேற்றுமை உருபை நீக்கி, எழுவாயாக மாற்ற வேண்டும்.

பாடத்தை - பாடம் + ஐ. இதில் ‘ஐ’ நீக்கினால், பாடம்(எழுவாய்)

(இ) பயனிலையுடன் ‘படு’, ‘பட்டது’ என்னும் துணைவினைகளைச் சேர்க்க வேண்டும்.

பாடம் கண்மணியால் படிக்கப்பட்டது.

இவ்வாறு செயப்பாட்டு வினை - Passive Voice அமையும் என்பதை அறிக. மேலும் சில எடுத்துக்காட்டுகள்.

செய்வினை செயப்பாட்டு வினை

ஆசிரியர் இலக்கணம் கற்பித்தார். இலக்கணம் ஆசிரியரால் கற்பிக்கப்பட்டது.

இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார் சிலப்பதிகாரம் இளங்கோவடிகளால இயற்றப்பட்டது.

செயப்பாட்டு வினை செய்வினை

நாட்டுப்பற்று நாடகக் கலைஞர்களால் வளர்க்கப்பட்டது. நாடகக் கலைஞர்கள் நாட்டுப்பற்றை வளர்த்தனர்.

இவ்வாறு, செய்வினை, செயப்பாட்டு வினைத் தொடர்கள் அமையும் என்பதை அறிக.

Similar questions