India Languages, asked by tamilhelp, 9 months ago

காடு எவ்வாறு உருவகப்படுத்தப்பட்டுள்ளது ?

Answers

Answered by anjalin
4

Answer:

காடு கோட்டையைப்‌ போன்றது:

பச்சைப்பசேலாகவும், தூய்மையாகவும்‌ தோன்றும்‌ காடு கோட்டையைப்‌ போன்றது.

அக்கோட்டையை காக்கும்  சுற்றுமதில்‌  நெருஞ்சி முள்ளும்‌, கள்ளியும்‌, முட்புதர்களும்‌ ஆகும்‌.

நுழைவு வாயில்‌:

அக்கோட்டையின்‌ நுழைவு வாயில்‌, அக்காட்டினுள்‌ செல்லும்‌ ஒற்றையடிப்‌ பாதையாகும்‌.

தூண்கள்‌:

அக்கோட்டையின்‌ தூண்கள்‌, ஓங்கி வளாந்துள்ள மரங்கள்‌.

கொடிகள்‌:

அம்மரங்களில்‌ தோன்றிய பூக்கள்‌ கொடிகளாகும்‌.

காடு ஒரு மரகதக்‌ கோட்டை:

  • சூரியனாலும்‌ நிலவாலும்‌ அக்கோட்டையாகிய காட்டுக்குள்‌ புகமுடியாது.
  • அக்காட்டிலுள்ள வயது முதிர்ந்த மரத்தினது பட்டை, முதலையின்‌ உடல்‌ நிறத்தைக்‌ கொண்டிருக்கும்‌.
  • கள்ளிப்புதரின்‌ மீது பிரண்டைச்செடிகள்‌ பரவிப்‌ படர்ந்திருக்கும்‌. முழு வரகரசி போன்ற கறையான்‌, ஆலமரத்தினது அடிமரத்தின்‌ உட்பகுதியினை அரிக்கும்‌. ஆனால்‌, அடிமரத்தை விழுந்து விடாது அதன்‌ விழுதுகள்‌ தாங்கி நிற்கும்‌.
  • ஏழை மக்கள்‌, உணவு கிட்டியபோது உண்டு மகிழ்ந்து, கிட்டாத போது வாடி இருப்பார்‌. அது போலக்‌ காடு, மழை பொழிந்தால்‌, தழைத்தும்‌, கடும்‌ வெயிலின்‌ போது வாடியும்‌ இருக்கும்‌.  எனினும்‌, அக்காடு தன்னிடமுள்ள இலை, பூ, கனி, காய்‌, தழை, மரம்‌ முதலியவற்றை மனிதர்களுக்கும்‌ மற்ற உயிரினங்களுக்கும் கொடுத்து, அழிவினை ஏற்று வாழ்கின்றன.

Similar questions