India Languages, asked by tamilhelp, 1 year ago

சமரசக்கோயிலை அமைத்தவர்‌ யார்‌ ? சமரச உணர்விற்கு எடுத்துக்காட்டாக அவர்‌
கூறும்‌ கருத்துகளைத்‌ தொகுத்தெழுதுக.

Answers

Answered by bhagirath0
0

Answer

1:26

1:26அச்சமில்லை அச்சமில்லை ...

1:26அச்சமில்லை அச்சமில்லை ...YouTube · Thanthi TV

1:26அச்சமில்லை அச்சமில்லை ...YouTube · Thanthi TVJan 24, 2018

Answered by anjalin
0

Answer:

சமரசக்‌ கோயில் இராமலிங்க அடிகளார் தலைமையில் நிறுவப்பட்டது.

சமரசக்‌ கோவில் பற்றி :

  • தமிழ்நாட்டில்‌ வாழ்ந்து மறைந்த நம்‌ இராமலிங்க அடிகளார்‌, சாதி சமய வேறுபாடுகளைப்‌ பலவுரைகளால் மறுத்தார்‌.அவர் சமரச ஞானத்தை அறிவுறுத்தினார். கோயில்கள்‌ எல்லாம்‌ சாதிக்‌ கோயில்களாய்‌ மாறியது கண்டார்‌.
  • அனைவரும்‌ வந்து வழிபடுவதற்கெனச்‌ சமரசக்‌ கோயில் ஒன்றை வடலூரில்‌ நிறுவினார்‌.

"எச்சபை பொதுவென இயம்பினர்‌ அறிஞர்கள்‌ அச்சபை இடங்கொள்ளும்‌ அருட்பெருஞ்சோதி" என்று  அருளிச்‌ சென்றார்‌.

  • அச்சபை அந்நோக்குடன்‌' சுவாமிகளால்‌ நிறுவப்பட்டது.

கடவுளின் சாட்சி சமரசம்:

  • சமரசம்‌ என்பது நாடு, மொழி, சமயவெறி, சாதி முதலியவற்றில்‌ கட்டுப்படாமல்‌ அவற்றைக்‌ கடந்து நிற்பது.
  • எல்லா நாட்டினர்‌ எல்லா மொழியினர்‌. எல்லா சமயத்தினர்‌, எல்லாச்‌ சாதியினரிடத்திலும்‌ புகுந்து நிற்பது சமரச ஞானம்‌.
  • நாடு, மொழி, சமயம்‌, சாதி முதலியவற்றைக்‌ கொண்டு சமரச உணர்வை இழப்பது அறிவுக்‌ திறன் குறைபாடு.
  • இந்தப்‌ பன்மைகளிடையே பரவிநிற்கும்‌ ஒருமைப்பாடே சமரசம்‌.
  • இதுவரை மனிதன்‌ தன்னுடைய அறியாமையால்‌ இயற்கையன்னையை மறந்து துன்பப்பட்டது போதும்‌. இனிமேலாவது சமரசக்‌ கொள்கைக்கு நெஞ்சில்‌ இடம் தந்து, வாழ்வானாக மற்றவரையும்‌ வாழ்விப்பானாக.

அழிவில்லா அருட்பெருஞ்சோதி :

  • நீதி, மெய்ப்பொருள், அழிவில்லா வாழ்க்கை சுகும்‌ முதல், நடுவு, இறுதி முதலியன அருட்பெருஞ்சோதி எனவறிந்தார்‌.
  • அவர்‌ சமயம், மதம்‌, மார்க்கங்கள் அவற்றின்‌ ஆசாரக்‌ கொள்கைகள், வேறுபாடுகள் சுத்த சன்மார்க்கத்திற்குத்‌ தடைகளாகக்‌ கருதினார்‌.

அவை தம்‌ மனத்தில்‌ பற்றாவண்ணம்‌ அருள்புரிய அருட்பெருஞ்சோதி அற்புதக்‌ கடவுளை வேண்டினார்‌.

மேலும்‌, சுத்த சன்மார்க்கத்தின்‌ முக்கிய லட்சியமாகிய ஆன்ம நேய ஒருமைப்‌ பாட்டுரிமை தம்மை விட்டு விலகாது நிறைந்து விளங்கச்‌ செய்ய வேண்டுமென்று வேண்டினார்‌.

Similar questions